முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் அக்காளின் ஆசைக்காக தம்பி செய்கிற தியாகம் என்ன என்பதே கதை பாசம் சொல்லும் படம்!

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது. அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள், ஏற்றங்கள் ஏராளம்.

வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் 'கொஞ்சம் கொஞ்சம்' தன் அக்காளின் ஆசைக்காக தம்பி செய்கிற தியாகம் என்ன என்பதே கதை மையம் கொள்கிற பகுதி.இதன் விளைவுகள் பற்றிய பயணமே திரைக்கதையின் போக்கு.இக்கதைக்குள் காதல், நகைச்சுவை, பாசம் அனைத்தும் இயல்பாகக் கலந்து உருவாகியுள்ளது இப்படம்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் உதய் சங்கரன். பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் மாணவரான இவர், மலையாளத்தில் சுமார் 20 ஆல்பங்கள் இயக்கியுள்ளார்.ஏற்கெனெவே தமிழில் 'விருந்தாளி' படம் இயக்கிய இவருக்கு இது இரண்டாவது படம்.தமிழ் சினிமா ரசிகர்கள் திறமைகள் புதுமைகளை ஆதரிக்கவும் ஆராதிக்கவும் தவற மாட்டார்கள். அவர்களை நம்பியே தமிழில் படம் இயக்கியுள்ளதாகக் கூறுகிறார்.

இயக்குநர்.படத்தின் நாயகனாக கோகுல், நாயகியாக நீனு நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் அப்புக்குட்டி வருகிறார். மேலும் ப்ரியா மோகன், மன்சூர் அலிகான், மதுமிதா, தவசி, சிவதாணு போன்றோரும் நடித்திருக்கிறார்கள். 35 நாட்களில் முழுப்படத்தை முடித்துள்ளது படக்குழு வின் திட்டமிட்ட பணிக்கு சான்று எனலாம்.பொள்ளாச்சி, தேனி, கேரளா எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவ்விரு பிரதேசங்கள் வரும் போது காட்சிகள் வெவ்வேறு நிறத்தில் இருக்குமாம்.படத்துக்கு ஒளிப்பதிவு பி.ஆர் நிக்கிகண்ணன். இவர் ராஜரத்னம் மற்றும் கே.வி.ஆனந்தின் உதவியாளர் .கலை- அபூ சஜன்.இசை வல்லவன். பாடல்கள் அருண்பாரதி, தேன்மொழிதாஸ் மீனாட்சி சுந்தரம், வல்லவன். படத்தில் 6 பாடல்கள். வருகின்றன.நடனம்- தீனா. படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. மிமோசா புரொடக்ஷன்ஸ் சார்பில் பெட்டி சி.கே மற்றும் பி.ஆர். மோகன்தயாரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து