Idhayam Matrimony

பள்ளி மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனை சார்பில் உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ரங்கஸ்னி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
டெங்கு விழிப்புணர்வு 

 சித்த மருத்துவர் இலங்கோவன், மருந்தாலுனர் மோகன், செவிலியர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தெப்போரள் வரவேற்றார். நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள், .டி.எஸ் டெங்கு கொசு உருவாவதை தடுக்க செய்ய வேண்டியவைகள், டெங்கு பரவாமல் தடுத்திடும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவியர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
 மேலும் மாணவியர்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ரங்காஸ்னி பதிலளித்தார். பின்னர் பள்ளி மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பின்னர் மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு பொது மருத்துவமனை ஊழியர்கள் இணைந்து டெங்கு தடுப்பு குறித்த உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து