எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் முன்பட்டம் என்று சொல்லகூடிய டிசம்பர் – ஜனவரி மாதங்களில் தான் கரும்பு சாகுபடி 70 சதவீதத்திற்கும் அதிகமாக பயிரிடப்படுகிறது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதால் கிணறு மற்றும் நீர் நிலைகளில் நீர் இருப்பு இருக்கும். ஆதலால் பணப்பயிரான கரும்பு சாகுபடி எளிதாகிறது. மேலும் முன்பட்ட பருவ சாகுபடி செய்வதால் ஏற்படும் பலன்கள்.
1. கரும்பின் முளைப்பிற்கு இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் கரும்பில் முளைப்புத்திறன் அதிகமாகிறது.
2. பருவமழை காரணமாக நட்ட மூன்று மாதங்களுக்கு நீர்பாய்ச்ச தேவையில்லை.
3. இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் அறவே இல்லை.
4. கிணற்றில் நீர் குறைந்தாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீர் பாய்ச்சி விதை கரும்பு ஆக வெட்ட வாய்ப்பு.
5. பயிர் பராமரிப்பு ஆட்கள் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு.
6. அடுத்த அரவைப்பருவத்தில் கரும்பை முன்னதாக வெட்ட வாய்ப்பு இருப்பதால் குறித்த காலத்தில் பணம், மற்றும் வெட்டு ஆட்கள் எளிதாக கிடைக்கும் அரிய வாய்ப்பு.
7. பண்டிகை காலமாதலால் கரும்பிற்கு தேவை அதிகம்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஏற்ற இரகங்கள் : CO.0212, CO86032
நடவு முறைகள்:
1. கரணை மூலம் நடவு.
2. ஒரு பருச்சீவல்கள் மூலம்.
விதைக்கரணை தேர்வு :
1. 6 மாத கரும்பில் இருந்து மட்டுமே விதைக்கரணை தேர்வு செய்ய வேண்டும்.
2. பூச்சிநோய் தாக்காத விதைகரும்புகளை தேர்வு செய்தல் வேண்டும்.
3. மறுதாம்புக்கரும்பில் இருந்து விதைக் கரணை தேர்வு செய்யக்கூடாது.
4. தொலைதூரம் எடுத்துச்செல்வதாய் இருந்தால் தோகை உரிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
விதைக்கரணைகளின் அளவு:
1. கரணை மூலம் நடவு செய்ய 30,000 இருபருக்கரணைகள் / ஏக்கருக்கு
2. ஒரு பருச்சீவல்கள் மூலம் நடவு ( நீடித்த நவீன கரும்பு சாகுபடி) ஏக்கருக்கு 65௦௦ நாற்றுக்கள்.
கரணை நேர்த்தி: விதைக்கரணைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பெவிஸ்டின், 5 மில்லி குளோர் பைரிபாஸ் 5gm சுண்ணாம்பு, 5 கிராம் யூரியா கலந்த கரைசலால் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும், பவிஸ்டின் பூஞ்சான நோய்களிலிருந்தும் குளோர் பைரிபாஸ் சாறு உறிஞ்சும் பூச்சிகளிளிருந்தும், சுண்ணாம்பு வறட்சியை தாங்கவும், யூரியா முளைப்புதிறனை கூட்டவும் உதவுகிறது.
நடவு முறை: 3 அடிக்கு ஒரு பார் பிடித்து கொண்டு கரணைகளை வயலில் தண்ணீர் பாய்ச்சியபின் பார்களின் பக்கவாட்டில் இருக்கும்படி பதித்தல் வேண்டும், கரணைகளை வாய்க்காலில் பதிக்கக்கூடாது, வாய்க்காலில் பதிப்பதால் மழைக்காலமாதலால் தண்ணீர் தேங்கி கரணை அழுகல் நோய் ஏற்பட ஏதுவாகி முளைப்புதிறன் பாதிக்கப்படும்.
களைக்கொல்லி தெளித்தல்: கரும்பில் முதல் மூன்று மாதங்கள் களைகளின் தாக்கம் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றிட வாய்ப்பாக அமைந்துவிடும். நட்ட 3 ஆம் நாள் களை முளைபதற்க்கு முன்பு தெளிக்கக்கூடிய களைக் கொல்லியான அட்ரசீன் என்ற களைக்கொல்லியை 1 kg எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்கப்பட்ட களைக்கொல்லி காலின் பாதத்தில் படாதவாறு பின்னோக்கி நடந்து தெளித்து வரவேண்டும். இது நட்ட 30 நாட்களுக்கு கோரை, அருகு தவிர அனைத்து களைகளையும் கட்டுபடுத்தும்.
அடி உரம்: மண் பரிசோதனைப்படி மட்டுமே உரமிடல் வேண்டும், மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில் ஏக்கருக்கு 4 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை பார்களின் சால்களில் தூவி நட வேண்டும். தொழுஉரம் ஏக்கருக்கு 5 டன் இடுதல், இரசாயன உரங்கள் பயிர் எடுத்துகொள்ள ஏதுவாவதுடன், மண்வளம் மேம்பாடு அடைகிறது.
உரப்பரிந்துரை : 110 : 25 : 45 தழை, மணி சாம்பல் சத்துகளை தரக்கூடிய உரங்களை 1 ஏக்கர் பயிருக்கு இடவேண்டும்.
களை எடுத்தல்: நட்ட 3௦ ஆம் நாள் ஏக்கருக்கு 1 மூட்டை யூரியாவை இட்டு லேசாக மண் அணைக்க வேண்டும், உடன் தண்ணீர் பாய்ச்சுதல் நல்லது.
இரண்டாவது களை எடுத்தல்: நட்ட 6௦ வது நாளில் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா 1 மூட்டை பொட்டாஷ் உடன் வேப்பம் புண்ணாக்கு 5௦ kg கலந்து களை எடுத்து லேசாக மண் அணைக்க வேண்டும்.
மூன்றாவது களை எடுத்தல்: நட்ட 9௦ ஆம் நாள் 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் ஏக்கருக்கு இட்டு நன்றாக மண் அணைத்தல் வேண்டும். இதற்கு மேல் தாமதப்படுத்தினால் போத்துக்கள் வளர்ந்து சர்க்கரை கட்டுமானம் பாதிக்கப்படும்.
வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த : எதிர்பாராத காரணங்களால் 2 மற்றும் 3 வது களை எடுக்க முடியாமல் போனால் வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த METRIBUZINE 1 KG + 2-4 D 600 gm கலந்து வளர்ந்த களைகளின் மீது தெளிப்பதால் களைகள் மட்டுப்படுத்தப்படும்.
தோகை உரித்தல்: நட்ட 5 வது மாதத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்தவும், மகசூலை அதிகரிக்கவும், பின்பருவ நேர்த்திகளை செய்யவும் தோகை உரித்தல் அவசியமாகிறது. தோகைகளை கால்நடைத்தீவனமாகவும், கூரை வேயவும் பயன் படுத்தலாம்.
விட்டம் கட்டுதல்: 7 வது மாதத்தில் கரும்பு சாயாமல் இருக்க, எலி மற்றும் அணில் போன்றவற்றின் சேதத்தை தவிர்க்க விட்டம் கட்டுதல் அவசியம், கரும்பை வெட்டுவதும், வெட்டுக்கூலி குறையவும் வாய்ப்பு.
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்: கரும்பு நட்ட 45, 60, 75 நாட்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கரும்பு பூஸ்டரை 1, 1 ½ , 2 kg அளவுகளை 200 lit தண்ணீரில் கலந்து தெளிக்க மகசூல் 2௦ சதவீதம் கூடும்.
அறுவடை : நட்ட 11-12 மாதங்களில் கரும்பு அறுவடைக்கு வந்துவிடும். கரும்பை கைக்கோடாரி கொண்டு அடியோடு வெட்டுவதால் அடிக்கரும்பில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதால் ஆலையின் கட்டுமானம் கூட வாய்ப்பாகும், மேலும் 5 டன்கள் கரும்பு ஏக்கருக்கு மகசூல் கூட வாய்ப்பாக அமையும். கரும்பை வெட்டியபின் தோகையை தீயிட்டு எரிக்காமல், தோகைகளை கரும்பு தோகை கம்போஸ்டாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கலாம்.மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு கரும்பு மகசூலை அதிகரித்து விவசாயிகள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்.
கோ.செந்தில்நாதன்,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர்.
வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636203.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
98-வது பிறந்தநாளை முன்னிட்டு அத்வானிக்கு பிரதமர் வாழ்த்து
08 Nov 2025டெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மட்டும் 6,453 மெட்ரிக் டன் அளவு கேழ்வரகு கொள்முதல் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
08 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் து
-
தெலங்கானா முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
08 Nov 2025தெலங்கானா : தெலங்கானா முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
துணை ஜனாதிபதி கர்நாடகா பயணம்
08 Nov 2025டெல்லி : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகாவுக்கு இன்று செல்கிறார்.
-
இதய நோய், புற்றுநோய் இருந்தால் விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு
08 Nov 2025வாஷிங்டேன் : இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.


