எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஜன.25 - சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நீர் தேக்கம் ஒன்றை அமைக்க ரூ. 330 கோடி, முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க செறிவு நீர்த் துளைகள் அமைக்கும் திட்டத்திற்காக 11.49 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் வழங்கி உத்திரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும், மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்ண்டி வட்டம் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளான கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகையை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி (1.00 பஙஇ) தண்ணீரை தேக்கி வைக்க இயலும். புதியதாக அமைக்கப்பட உள்ள இந்த நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்ண்டி வட்டம் பாலவாக்கத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், ஊத்துக் கோட்டை கிராமத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலும் அமையப்பெறும்.
இதே போன்று, கண்டலேறு ண்டி கால்வாய் நெடுகை 0 மீட்டரிலிருந்து 6,800 மீட்டர் வரை ஒரு மண் அணை அமைக்கப்படும். மேலும் கண்டலேறு ண்டி கால்வாய் நெடுகை 900 மீட்டரிலிருந்து 7,500 மீட்டர் நீளத்தில் கால்வாய் ஒன்று அமைக்கப்படும். இந்தக் கால்வாய் தாமரைக்குப்பம், செஞ்சி, அகரம், பள்ளிக்குப்பம் கிராமங்கள் மற்றும் பள்ளிக்குப்பம் காப்பு வனத்தின் வழியாக செல்லும். இந்தக் கால்வாய் ஆந்திர மாநில நீர்பிடிப்பு பகுதியிலிருந்து கிடைக்கப் பெறும் நீரினை எடுத்துச் செல்கின்ற வகையில் அமைக்கப்படும். மேலும், நெடுகை 4,125 மீட்டரில் உபரிநீர் வழிந்தோடியும், நீரின் போக்கை சீராக்க சமநிலைப் பொறிகளும் அமைக்கப்படும்.
இத்திட்டத்திற்காக 560.05 ஏக்கர் அரசு நிலம் உள்ளிட்ட 1,252.47 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும். இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுக் காலத்தில் முடிவு பெறும். இதன் மூலம் மழைக்காலத்தில் கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் தேக்கி வைக்கப்பட்டு, மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.
தற்பொழுது அதிக பயன்பாட்டின் காரணமாக, நிலத்தடி நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே நிலத்தடி நீரின் அளவினை அதிகரிக்க, செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தின் கீழ் ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஒடைகளின் குறுக்கே தடுப்பணைகள், ஊருணிகள் ஆகியவை அமைக்கப்பட்டு செயற்கை முறையில் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் , தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும் பாபநாசம் வட்டங்களில் செயற்கை முறையில் செறிவு நீர் துளைகள் அமைக்க, 63 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் செயற்கை முறையில் செறிவு நீர் துளைகள் அமைக்க, 1 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டு துளை கிணறுகள் அமைக்க, 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டு துளை கிணறுகள் அமைக்க, 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம், ஆகிய பகுதிகளில் செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட தடுப்பு சுவர் அமைக்க 3 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 5 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கொல்லப்பள்ளி கிராமத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கீழ் மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் அமைக்க, 1 கோடியே 90 லட்சம் ரூபாயும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கொருக்காத்தூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் அமைக்க, 2 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த 41 கிராமங்களில் உள்ள முறை சார்ந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செயற்கை முறையில் 100 செறிவுநீர் துளைகள் அமைக்கும் திட்டத்திற்கு 2 கோடியே 5 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 6 கோடியே 16 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணிகளுக்காக மொத்தம் 11 கோடியே 49 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கூறிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் நீர்வள ஆதார அமைப்புகளில், நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
இங்கிலாந்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
14 Jul 2025சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன்கள்
14 Jul 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விருந்து நிகழ்ச்சியில் சாம்பியன்கள்
14 Jul 2025கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
14 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.