முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆச்சர்ய தொழில்நுட்பம்

கருவில் சிசு வளரும் போதே அதை, நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலம், ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். விர்சுவல் ரியாலிட்டிதான் அந்த தொழில்நுட்பம். இதன் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும். 4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் இதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை பார்த்த நாம், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியுமாம். எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழலாம்.

உலகை முதன்முதலாக கப்பலில் சுற்றி வந்த பயணி

பெர்டினல் மெக்கலன் என்ற ஸ்பெயின் நாட்டு மாலுமி 1519 இல் 5 கப்பல்களுடன் இந்தியாவை தேடி புறப்பட்டார். அவர் தென் அமெரிக்கா வந்து அங்கிருந்து மேற்கொண்டு செல்லும் வழியை தேடினார். அவர் வந்த கடற்பாதைதான் மெக்கல்லன் நீரிணை என்று அறியப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழியாக 99 நாட்கள் பயணம் செய்து குவாம் என்ற தீவை அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ் வந்தனர். அங்கு ஏற்பட்ட உள்நாட்டுகாரர்களுடனான சண்டையில் மெக்கல்லன் கொல்லப்பட்டார். மிஞ்சியவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 1522 ஆம் ஆண்டு 3 வருட  பயணத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் ஸ்பெயின் வந்தடைந்தனர். இந்த பயணம்தான் உலகை சுற்றி வந்த முதல் கப்பல் பயணம் என அறியப்படுகிறது. 

'மாஸ்பெக் பேனா'

நமது உடலில் பத்து நொடிகளில் புற்று நோய் இருப்பதை கண்டறியும் புதிய வகை பேனா ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு 'மாஸ்பெக் பேனா' என்று பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் புற்றுநோய் கட்டி கண்டறியப்படுவதுடன், அதனை அகற்றவும் முடியும் என்கின்றனர். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் சில புற்று நோய் அணுக்கள் உடலில் தேங்கியிருக்கும். இந்த பாதிப்பை மாஸ்பெக் பேனா மூலம் சரி செய்ய முடியுமாம். அறுவை சிகிச்சையின்போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்தப் பேனாவால் ஒரு துளி நீர் செலுத்தப்படும். அதன்பின் அங்கிருக்கும் திசுக்கள் புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது 96 சதவிகிதம் தெரிந்துவிடும்.

ஹார்மோன் பிரச்சனை

பெண்களுக்கு உடல் பருமன் அதிகமாக அல்லது குறைய ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம். பெண்களுக்கு உண்டாகும் ஹைபோதைராய்டிஸம். இதனால் உடல் பருமன், மன தளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் ஆகியவை ஏற்படுகிறது.  மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் குறைப்பாட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரம் கேட்டால் அசந்து போவீர்கள்

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. ஆனால் அது தான் உண்மை. ஆனால் பால் மட்டும் பசும் பால் அல்ல.. கழுதையின் பால். அதுவும் விற்கப்படுவது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில். அம் மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற இடத்தில் தான் இந்த வியாபாரம் சக்கை போடு போடுகிறது. கழுதைப் பாலை வாங்குவதற்காக கூட்டம் அலை மோதுகிறது. கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் இது போன்ற பல்வேறு மாற்றங்கள் நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கழுதைப் பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே இதையடுத்து தற்போது கழுதைப் பாலுக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெறும் ஒரு ஸ்பூன் பால் ரூ.100 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1 லிட்டர் கழுதைப் பால் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இது குறித்து டாக்டர் ரோட்ஜே கூறுகையில், கழுதைப் பாலால் கொரோனா போன்ற தொற்றுகள் குணமாவதில்லை. இது மக்களின் தவறான நம்பிக்கை உடல் நலம் பாதித்தால் டாக்டரிடம் சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து காசை இவ்வாறு வீணாக வாரி இறைக்கக் கூடாது என்றார். எது எப்படியோ இதன் மூலம் கழுதைக்கும் அதன் பாலுக்கும் புது மவுசு கிடைத்துள்ளது.

5000, 1000 ரூபாய் நோட்டுகள்

பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago