முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகில் வியர்க்காத விலங்கு எது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

உலகின் வியர்க்காத விலங்கு எது.. அல்லது சேற்றில் திளைக்கும் விலங்கு எது எப்படி கேட்டாலும் பதில் ஒன்றுதான்.. சொல்லாமலேயே தெரிந்திருக்கும் அவை பன்றிகள் தான் என்று. ஏன் பன்றி போல் வியர்க்கிறீர்கள் என ஆங்கிப பழமொழி உள்ளது. ஆனால் உண்மையில் பன்றிகளுக்கு வியர்ப்பதில்லை. அவற்றின் உடலில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. எனவேதான் அவை தனது உடல் வெப்பத்தை தணித்துக் கொள்வதற்காக நீர்பாங்கான சேற்றில் அவ்வப்போது புரண்டு வெப்பத்தை தணித்துக் கொள்கின்றன. நீர் பாங்கான இடம் கிடைக்காத போதுதான், எந்த வகையான நீர் நிலையாக (சாக்கடையானாலும்) இருந்து இறங்கி அதில் புரள்கின்றன. எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.

காதலிக்காக பீச்சில் நிரப்புவதற்காக மணலை வாங்கியவர் யார் தெரியுமா?

யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.

தேரிக்காட்டு கருப்பட்டி ரயில் தெரியுமா?

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடியது அந்தத் தேரிக்காட்டுக் கருப்பட்டி ரயில்.1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பாரி அண்ட் கோ’ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. அந்த ஆலையின் சரக்குப் போக்குவரத்துக்காக ‘குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே’ (கே.எல்.ஆர்) என்ற பெயரில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.திருச்செந்தூரில் இருந்து திசையன் விளைக்கும், குலசேகரன் பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனித்தனியாகச் சுமார் 46 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போர் மேகங்கள் இந்தியாவைச் சூழ்ந்திருக்க, இரண்டாம் உலகப் போர் உலகைச் சூழ்ந்திருக்க, தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 1940ம் ஆண்டு இந்த ரயில் சேவையைப் பாரி நிறுவனத்தார் படிப்படியாக நிறுத்தி விட்டனர். திசையன்விளை – திருச்செந்தூர் இடையே மூன்று மணி நேரப் பயணத்துக்குக் கட்டணம், 13 அணாவாக (78 பைசா) இருந்தது.

சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்து

நாம் தற்போது, உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து, அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளோம்.  `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். கோழி இறைச்சி, கீரை உணவு வகைககள்,  முட்டை, காளான் உணவுகள், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், பீட்ரூட் உணவு போன்றவைகள் சூடுபடுத்தி உண்ணக்கூடாத உணவு வகைகள் ஆகும்.

இறைச்சியுண்ணும் தாவரம்

பொதுவாக தாவரங்களைத்தான் விலங்குகளும், பூச்சிகளும், புழுக்களும் சாப்பிடும். ஆனால் புழு, பூச்சிகளை சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன என்பது ஆச்சரியம் தானே.. ஆனால் உண்மைதான். Carnivorous plant என்ற தாவரம் ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. அதான் விலங்குகளை விரும்பி உண்ணக் கூடியது. இவை பெரும்பாலும் பூச்சிகளையும், ஊர்வனவற்றையுமே குறி வைக்கின்றன. இதற்காகவே இவை சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளன. இதன் இலைகள் அருகில் வரும் பூச்சிகளை அப்படியே லபக் கென்று கவ்வி பிடித்து மூடிக் கொள்கின்றன. அதன் பின்னர் அதில் சுரக்கும் ஒரு வகை திரவம் அப்படியே பூச்சிகளை தின்று செரிக்க உதவுகின்றன. பெரும்பாலும் மண்ணில் நைட்ரசன் சத்து குறைவாக உள்ள சதுப்பு நிலங்களிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன. ஆகவே பூச்சிகளை விழுங்கி அதன் உடலில் உள்ள புரதத்தில் கலந்திருக்கும் நைட்ரசனை உறிஞ்சி விடுகின்றன.. நம்மூர்களில் இல்லை எனவே நாம் பயப்படத் தேவையில்லை..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago