முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இப்படியும் வினோதம்

பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் என்பவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்க செய்யப்படுகிறது. ஆனால் அவர் விசே‌ஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார். இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது. 37 டிகிரி வெப்பம் கொடுத்தார்.

மர்ம உருவம்

சூரியனை விமானம் போன்ற பொருள் ஒன்று கடப்பது போல புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. இது தற்போது, உலகளவில் வைரலாகி வருகிறது. சூரியனைக் கடக்கும் அந்த பொருள் 'சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிஷ்டிகாசனம்

கவலையால் அவதிப்படுபவர்களுக்கு ஜெயிஷ்டிகாசனம் நல்ல பலனைத்தரும். மேலும், இதை தொடர்ந்து செய்து வந்தால், தொப்பை குறையும்.  மன இறுக்கத்தை போக்குகிறது. முதுகு தண்டு வடங்களில் உள்ள கோளாறுகளை அகற்றுகிறது.  உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுத்து புத்துணர்ச்சியை தரும் ஆசனம் இது.

உதடு வறட்சி

உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து காய்ந்து போவதற்கு உடலின் வெப்ப‍நிலை அதிகரிப்பே காரணம். உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி பருகினால் நல்லது. மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

சானிடைசர்கள் : கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

சானிடைசர் பயன்படுத்துவதால் சில தொல்லைகள் ஏற்படலாம். சானிட்டைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் உள்ளதால் வைரஸ்களை கொல்லும் ஆற்றல் படைத்தவை. ஆனால் சில சுத்திகரிப்பான்களில் ட்ரைக்ளோசன் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரைக்ளோசன் பூச்சிக்கொல்லிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வகை வேதிப்பொருள். இது விஷத்தன்மைக் கொண்டது. இது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. இத்தகைய சுத்திகரிப்பான்களை அடிக்கடி பயன்படுத்திவிட்டு ஏதேனும் உணவைச் சாப்பிடுவதால் இது எளிதில் நம் உடலில் செல்லக்கூடும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். தசைகள் மற்றும் கல்லீரலும் பாதிக்கப்படும். இதனால் செரிமான அமைப்பும் பாதிப்படையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயெதிர்ப்பு சக்தியும் பாதிப்படையும். இதனால் உடலும் பலவீனமடையும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு சானிட்டீசரைப் பயன்படுத்தி கை கழுவுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். முகத்தின் அருகில் கையைக் கொண்டு செல்வதினாலும் அந்த ரசாயனங்கள் சுவாசப்பாதை வழியே உடலினுள் நுழைந்து சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே ட்ரைக்ளோசன் இல்லாத சானிடைசரை வாங்கி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நமக்காகவே இருக்கிறது இயற்கையான சுத்திகரிப்பான்களான வேப்பிலையும், மஞ்சளும். இரண்டையும் நீரில் கலக்குங்கள்.. உடலை கைகளை கவலையின்றி கழுவுங்கள்.

மீல் மேக்கர் என்றால் என்ன?

இன்றைய நவீன  உலகில் உணவும் நவீனமாகி வருகிறது. ஆனால் நவீன உணவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். அதெல்லாம் இருக்கட்டும்.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் பலவற்றை குறித்து நமக்கு எதுவும் தெரிவதில்லை. குறிப்பாக நான் வெஜ் சாப்பிடுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் மீல் மேக்கரை சொல்லலாம். மீல் மேக்கர் என்றால் என்ன. சோயா ஜங்க்.அதான்ங்க அப்படின்னா... அப்படி கேளுங்க.. சோயா பீன்ஸ் அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து எண்ணெய், சாஸ், புரதம், பால், போன்றவற்றை எடுக்கும் தொழில் நுட்பத்தில் கடைசியாக எஞ்சும் சக்கை அல்லது புண்ணாக்குதான் இந்த மீல் மேக்கர். இதை கொரியாவில் உள்ள மீல் மேக்கர் என்ற நிறுவனம் தயாரித்து விற்க அந்த பெயரே நிலைத்து விட்டது. பார்க்க இறைச்சி போல தெரிவதால் அதிகம் பேரால் விரும்பப்படுகிறது. அளவாக உணவில் பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால்.. குறிப்பாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹார்மோன் பிரச்னை, விந்தணுக்களில் குறைபாடு போன்றவை தோன்ற வாய்ப்புகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago