முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.

மறைந்த கண்டம்..

மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ் தீவு கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மொரிஷீஸ் தீவில் சிர்கான்ஸ் எனப்படும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பது அவசியம்

சிறுத்தை இனம் அழிந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 7,100 சிறுத்தைகள் உள்ளன. இவை வாழ்வதற்கு ஏற்ப தேவையான இடங்களோ, சரணாலயங்களோ இல்லை. இதனால் அவைகள் காடுகளை விட்டு வெளியே வரும் சூழ்நிலையில் மனிதர்களால் வேட்டையாடப்படுவதாலேயே அதன் இனம் அழிய காரணமாக இருக்கிறது.

தென்னகத்து காஷ்மீர்

மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய - சுவிஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும். இங்கு குண்டலா ஏரி உள்ளது. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம். மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இடம் உள்ளது. இங்கு வரையாடு அரிய விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக உள்ளது.

ரத்தத்தை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு

ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்பொருள் தான் அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு ஆக்ஸிசனை கொடுப்பதும் அதுதான். ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம். சிவப்பணுக்கள் காணப்படும். அவை உற்பத்தியாகும் இடம் இதயமல்ல; எலும்பு மஜ்ஜையில்தான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.  வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்த கசிவை தடுப்பவை பிளேட்லட் அணுக்கள். ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மிலி ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் மற்ற அணுக்கள் 10 சதவீதமும் இருக்கும். உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா... ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்!  ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்!  பைக்கின் சராசரி வேகத்தை விட சற்று அதிகம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

செவ்வாய் கிரகம், Mars planet

நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.  இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது. ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர் பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசா வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago