முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இரு மலைகளுக்கு நடுவே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வாலிபர்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் Nathan Paulin. இவருக்கு உயரத்தில் கயிறு கட்டி நடப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி அத்தனை விருப்பம். சிலருக்கு தரையில் நடப்பதற்குள்ளேயே கண்ணை கட்டிக் கொண்டு வந்து விடும். ஆனால் மனுசன் எத்தனை உயரத்திலும் ஒரு ஒல்லியான கயிறை கட்டிக் கொண்டு சாதாரணமாக நடந்து சென்று விடுகிறார். இவர் ஏற்கனவே ஈபிள் டவர் உள்ளிட்ட பல்வேறு உயரமான இடங்களில் கயிறு கட்டி நடந்தவர். தற்போது  ரியோடி ஜெனிரோவில் உள்ள பாபிலோனியா மலைக்கும் உர்கா மலைக்கும் இடையே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது.  இரண்டுக்கும் இடையிலான தொலைவு 500 மீட்டர். உயரம் 264 அடி அதாவது 80 மீட்டர். மேலேயிருந்து கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. மனுசன் அதற்கெல்லாம் அசந்த ஆள் இல்லை. ஜாலியாக நடந்து மலையை கடந்து விட்டார்.

பருக்களை அகற்ற...

ஒரு துணியில் ஜஸ்கட்டியை வைத்து பருக்கள் சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால் பருக்கள் மறையும். பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது பருக்கள் மீது தடவி மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போயிடும்.

உலகிலேயே மிகவும் பழமையான நகரம்

நம்மூர் ஆட்களிடம் கேட்டால், மதுரை, பாட்னா (பாடலிபுத்திரம்) இப்படி எதையேனும் சொல்வோம். சரி அதை விடுங்கள், உலக அளவில் ஜெருசலேம் அல்லது ஏதேன்ஸ் என்போம். ஆனால் அதெல்லாம் கிடையாதாம், மிகவும் பழமையான ஆனால் இன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நகரம் சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரம் தானாம். சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளாக இது இயங்கி வருகிறதாம். இந்த நகரில் மட்டும் கிமுக்கு முன்பு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி சுமார் 125 வரலாற்று சின்னங்கள் உள்ளதாம். தற்போது இந்நகரில் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

எடை குறைய

கொக்கோ பவுடரில் சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய்களை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. கொக்கோ பவுடர் சற்று கசப்பாக இருக்கும். கொக்கோ பவுடரைக் கொண்டு வீட்டிலேயே ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் தயாரித்துக் குடித்தால் விரைவில் எடையை குறைக்கலாம்.

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம்

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

ஒரு ரூபாய் நோட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

முதல் ஒரு ரூபாய் நோட்டு இங்கிலாந்தில் அச்சிடப்பட்டது. இந்த நோட்டு  நவம்பர் 30, 1917 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மன்னரான ஐந்தாம் ஜார்ஜின் படம் அந்த ஒரு ரூபாய் நோட்டின் இடது மூலையில் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 1861-ம் ஆண்டு முதலே இந்தியாவில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இருந்த போதிலும், ஒரு ரூபாய் நோட்டு 1917-ம் ஆண்டில்தான் புழக்கத்தில் வந்தது. காரணம் ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க பயன்படுத்திய வெள்ளி,  2 ஆம் உலகப் போரில் ஆயுதத் தயாரிப்பிற்காக உருக்கப்பட்டுவிட்டது. 1917-ம் ஆண்டில் வெளியிடப்பட்டபோது, ஒரு ரூபாயின் மதிப்பு 10.7 கிராம் வெள்ளிக்கு சமமாக இருந்தது. 10 கிராம் வெள்ளியின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.670. இந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாயின் மதிப்பு 600 மடங்கு குறைந்துள்ளது. பணத்தை சீராக அல்லது பரிசாக வழங்கும்போது, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றினைச் சேர்த்து 101/- ரூபாயாக மொய் எழுதும் பழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்துவருகிறது. எனவே ஒரு ரூபாயின் மதிப்பு இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago