Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கடலுக்கு அடியில் முட்டையை உடைத்தால் என்ன ஆகும்

முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..

இந்தியர்களின் உடலில் சர்க்கரை நோயை அதிகரிக்க செய்யும் மரபணு

15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பாதுகாப்பு அவசியம்

பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை முடியிலோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  ப்ளீச்சிங் செய்யும் முன் முகத்தை க்ளன்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குகிறது. அதுமட்டுமின்றி க்ளன்சிங் செய்வதால் முகத்தில் மேக்அப் போட்டிருந்தால் அதுவும் நீங்கிவிடும். எனவே பால் அல்லது க்ளன்சரைக் கொண்டு பஞ்சு மூலம் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

ஆடம்பரத்தின் உச்சம்

இந்தோனேஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மானுக்காக, சொகுசு கார் உட்பட இவருக்கு தேவையான 460 டன் சாதனங்கள்  சவுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இவர் விமானத்தில் இருந்து இறங்க, தங்கத்தால் ஆன நகரும் படிகட்டு பயன்படுத்தப்பட்டதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

மனித தோலால் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம்

காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வினோத மக்கள்

இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago