Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிது இது

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்துவரும் நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங்குடன் கூடிய உடற்பயிற்சி சாதனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த ஹைவ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ஐகாரோஸ் ஃப்ளையிங் பிட்னெஸ் மெஷின் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி சாதனத்தின் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டியில் விளையாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்ய முடியும். இதன் மூலம் உடல் முழுமைக்குமான உடற்பயிற்சி சாத்தியம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சூடான நீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்ட பின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

பிபிசி தமிழோசை

76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் மரணத்தை காட்டிலும் சுற்றுசூழல் மாசால் இறந்தவர்கள் அதிகம்

கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.

மறதி நகரம்

பெங்களுருவில் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான பொருட்களை காரிலேயே தவறவிட்டுச் செல்வதாகவும், அதற்கடுத்த இடங்களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இருப்பதாக தேசிய அளவிலான உபெர் இண்டெக்ஸ் தகவல்கள் தெவிக்கின்றன. செல்போனுக்கு இந்த பட்டியலில் முதலிடம்.

ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?

ஒவ்வொரு மிருகமும் விதவிதமான ஓசைகளை எழுப்பக் கூடியனவாகும். அதே போல பறவைகளும் விதவிதமான ஒலிகளை எழுப்பும். அவை நம் மனதுக்கு மிகுந்த இதமான உணர்வை அளிக்கும். அதே நேரத்தில் மிருகங்கள் எழுப்பும் ஒலிகள் சில வேளை நம்மை கவர்ந்தாலும், பல நேரங்களில்அவை அச்சுறுத்துவதைப் போலவே இருக்கும். பறவைகள், விலங்குகள் ஒலிகளை நாம் கேட்டிருந்தாலும் விலங்குகளில் மிக உயரமான மிருகமான ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?  அவை எப்படி ஒலி எழுப்பும் என்பதை நம்மில் பெரும்பாலானோர்.. அவ்வளவு ஏன் நாம் யாருமே கேட்டிருக்க முடியாது. இது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. அவை எழுப்பும் ஒலிகளை மனிதனால் கேட்க முடியாது என்பதுதான் அதன் சிறப்பம்சம். மனித செவிகளுக்கு குறிப்பிட்ட டெசிபலில் தொடங்கி குறிப்பிட்ட டெசிபல் வரையிலான சத்தங்களை மட்டுமே கேட்கும் திறன் உள்ளது. அதற்கு கூடுதலாகவோ, குறைவாக எழும் சத்தங்களை மனித செவிகளால் கேட்க இயலாது. எனவே ஒட்டக சிவிங்கிகள் எழுப்பும் ஒலிகள் நமது செவித்திறனுக்கு குறைவான டெசிபல் கொண்டவை என்பதால் நம்மால் அவற்றை வெறும் செவிகளால் கேட்க முடியாது. ஆராய்ச்சியாளர்களின் பிரத்யேக கருவிகளை கொண்டுதான் அவற்றை பதிவு செய்ய இயலும் என்பது ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago