Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாறும் துருவங்கள்

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து ஏற்படுமாம். காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படுவதால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படுமாம். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்.

உலகில் விலை உயர்ந்த கார் Bugatti La Voiture Noire விலை ரூ. 140 கோடி

புகாட்டி லா வொய்ச்சர் நொயர் உலகின் விலை உயர்ந்த கார் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு  கார்களை மட்டுமே உருவாக்குவது புகாட்டியின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். தற்போது ஒரே ஒரு நொயர் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது, அது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. முதலில் 2019 இல் மற்றொரு கார் தயாரிப்பு முடிந்து விடும் என குறிப்பிடப்பட்டாலும், புகாட்டி காரை உருவாக்க இன்னும் இரண்டரை ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு261 மைல் வேகம், மற்றும் 2.5 வினாடிகளில் 0-60 மைல் வேகத்தை எட்டக்கூடியது. ஏறக்குறைய புயலை போல சீறிப் பாயக் கூடிய இந்த காரில் உலகில் உள்ள அனைத்து கார்களை காட்டிலும் அதிகமான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதை வாங்கியவரின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை என்ற போதிலும் வரிக்கு முன்பாக காரின் உள்ளடக்க விலை 12.4 மில்லியன் டாலர் என்றும் வரிகளுடன் 18.7 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.140 கோடி என்று சொல்லப்படுகிறது. அம்மாடியோவ்...

'டூ இன் ஒன்' விமானம்

நீரிலும், வானிலும் செல்லக் கூடிய வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா தயாரித்து வருகின்றது. இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.AG600 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 37 மீட்டர் மொத்த  நீளமும், 38.8 மீட்டர் நீளமுள்ள இறக்கையையும் கொண்டது. 53.5 டன் சுமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், 20 டன் நீரையும் சுமந்து செல்லும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் 4500 கி.மீ பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானம் வானில் பறக்கும் போது 53 டன் சுமையை தாங்கக் கூடிய சக்தி கொண்டது.

புதிய மருந்து கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிலர் வாரம் ஒருமுறை அல்லது தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். இதில் இருந்து தப்பிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  புதிய மருந்து மூலம் மாதம் ஒரு தடவை மட்டும் ஊசி போட்டால் போதும். இதை 2-ம் நிலை (டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்து ‘ஜெல்’ போன்ற தோற்றம் உடையது. இதை ஊசி மூலம் செலுத்தியவுடன் உடலில் தேங்கிவிடும். பின்னர் உடல் வெப்பத்தின் மூலம் சிறிது சிறிதாக உருகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

தவிர்க்க வேண்டியவை

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.

மோட்டார் வீடு

எலிசியம் என்ற பெயரிடப்பட்டுள்ள நகரும் சொகுசு வீடு ஒன்றை 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் இல்லத்தின் உள்பகுதியில் அமர்வதற்கான பெரிய அளவிலான சோஃபா மற்றும் படுக்கை வசதி, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்தும் சென்சார் சுவிட்சுகள் கொண்டதாக இருக்கிறது. இரண்டு பேர் தங்குவதற்கான சொகுசு படுக்கை வசதியுடன் ஒரு அறையும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago