முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல்

விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை, மலையளவு குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள். இவை இரண்டுக்கும் ஒரு சேர தீர்வு கண்டுள்ளனர் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர். டில்லி இந்தியன் ஸ்டேட்டஸ்டிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்கள் 8 பேர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பெட்ரோலிய மூலப்பொருட்களை பிரித்தெடுத்துகும் முறையை கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு காப்புரிமையை பெற்றனர். அவர்கள் பீகார் மாநிலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவியுள்ளனர். கிராவிட்டில் அக்ரோ மற்றும் எனர்ஜி என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆலையை அவர்கள் வங்கி கடனாக பெறப்பட்ட ரூ25 லட்சம் பணத்தை கொண்டு துவங்கியுள்ளனர். இந்த ஆலையில் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மொத்தம 175 லிட்டர் பயோ  பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்படுகிறது. அதுவும் லிட்டருக்கு ரூ.62 செலவில் இந்த பயோ-பெட்ரோல்-டீசல் தயாராகிறது. இதை அவர்கள் ரூ.70-க்கு விற்பனை செய்கின்றனர்.

சோகத்தை வெளிப்படுத்த

ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. ஆங்கில யர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறை பின்பற்றப்பட்ட து. அதற்காக நாமும் பின்பற்ற வேண்டுமா என்ன?.

இரவில் மனிதர்களை போலவே தூங்கும் தாவரங்கள் - ஆய்வில் ருசிகர தகவல்

பின்லாந்தை சேர்ந்த பின்னிஸ் ஜியோஸ்பாசியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பினர், பின்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் தாவரங்களை ஆராய்ச்சி செய்தனர். லேசர் ஸ்கேனிங் முறையில் இரவு நேரத்தில் தாவரங்களில் நிகழும் மாற்றத்தை அவர்கள் கணக்கிட்டனர். அதில் தாவரங்கள் மனிதர்கள்போலவே இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வதாகவும், அது அவைகளின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா உயிரினங்களைப் போலவே தாவரங்களின் வளர்ச்சியிலும், முக்கிய மாற்றங்களிலும் தூக்கம் பங்கு வகிப்பது தெளிவாகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

குரங்கு வடிவில் ஏலியன்ஸ் அதிர்ச்சியூட்டும் நாசா....

ஏலியன்ஸ் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது யு.எப்.ஓ என்ற அமைப்பு தகவலை கொடுத்து வருகிறது. அதன்படி, செவ்வாய் கிரகத்தில் குரங்கு வடிவில் ஏலியன்ஸ் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான சிலந்தி மற்றும் நத்தைகள் வடிவில் ஏலியன்ஸ் காணப்படுவதாக கூறியுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் நாசா, செவ்வாய் கிரக்ததில் ஆறு இருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு ஏலியன்ஸ் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது, செவ்வாயில் குடியேறும் மனிதனின் ஆர்வத்தில் பீதியை கிளப்பியுள்ளது.

அதிசய ரயில்

ஹரியானா மாநிலத்தில் இருந்து இமாச்சல பிரதேசத்ரதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பரில், இந்த ரயில் தண்டவாளப்பாதை பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும் இந்த ரயில் தடையில்லாமல் 365 நாட்களும் ஓடக்கூடியதாகவுள்ளது. பனிக்கட்டிகள் தண்டவாளத்தில் விழுந்தாலும் அதனை அப்புறப்படுத்தும் நவீன கருவிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் பாதை  ஐ.நா. பாரம்பரிய பாதுகாப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது தேசிய தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில், பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகவும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஹரியானா - இமாசலப்பிரதேச ரயில் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.

தலையில் இயற்கையான டார்ச் லைட்டை சுமக்கும் மீன்

ஆழ்கடல் அதிசயங்கள் தேட தேட தீராதவை. ஆழ்கடலுக்குள் 3 ஆயிரம் அடி ஆழம் வரை சூரிய ஒளி செல்ல முடியாது என்பதை நாம் அறிவோம். அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு தகவமைப்புகளை ஆழ்கடல் உயிரினங்கள் கொண்டுள்ளன. அவற்றில் மின்சார மீன், ஒளிரும் ஆக்டோபஸ் போன்ற உயிரினத்தை போலவே மற்றொரு அதிசயத்தையும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அது anglerfish எனப்படும் ஆழ்கடல் மீன் இருட்டை சமாளிக்க புதிய உத்தியை கையாள்வதாக தெரியவந்துள்ளது. இதன் தலைப்பகுதியில் போட்டோ பாக்டீரியா எனப்படும் ஒளிரும் பாக்டீரியாக்களை கவர்வதன் மூலம் ஒளியை உமிழச் செய்கின்றன என தெரியவந்துள்ளது. இது தலையில் டார்ச் லைட்டை பொறுத்தியது போன்ற தோற்றத்தையும் அதற்கு அளிக்கிறது. இயற்கை எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago