முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா?

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா... முதலில் கலனில் நிரப்பிய நீரால் முகம் பார்த்த மனிதன் பின்னர் கிமு 6 ஆயிரம் வாக்கில் நன்றாக பளபளப்பூட்டப்பட்ட எரிமலை குழம்பு உறைந்த கற்களையே முகம் பார்க்கும் கண்ணாடியாக பயன்படுத்தி வந்தான். இது பயன்பாட்டுக்கு வந்ததும் நீர் கண்ணாடி விடை பெற்றது. கல் கண்ணாடி ஆட்சி புரிந்தது. அதன் பின்னர் மெசபடோமியா பகுதிகளில் பாலீஸ் செய்யப்பட்ட செப்பு தகடுகள் கண்ணாடிகளாக பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மனித முகங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளும் பறவை எது தெரியுமா?

மனிதர்களை அவர்களின் முகங்களை பார்த்தால் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளும் பறவை எது தெரியுமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. அது வேறு எதுவும் இல்லை... நாம் அன்றாடம் பார்க்கும் காகம் தான் அது. அது மனிதர்களின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டால் தனது வாழ் நாள் முழுவதும் மறக்காமல் அடையாளம் காணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் நம்மால் ஒரு காகத்தை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் நம் முன்னால் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியுமா.. நிச்சயம் முடியாது. அதே போல தன்னுடன் நட்பாக பழகும் மனிதர்களுக்காக அவை பரிசு பொருள்களை கொண்டு வந்து கொடுக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றனவாம்.  என்ன ஓர் ஆச்சரியம் பாருங்கள்.

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.

புராணங்களில் இடம் பெற்றுள்ள பறவைகள் எது தெரியுமா?

எகிப்து புராணங்களில் பா என்ற பறவையும், சாம்பலிலிருந்து உயிர்தெழும் பீனிக்ஸ் பறவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டுப்புற கதைகளில் கூ என்ற பறவை வருகிறது. பூர்வீக அமெரிக்க புராணங்களில் தீப்பறவை இடம் பெற்றுள்ளது. கிரேக்க புராணங்களில் ஹார்பீஸ் என்ற பறவை சொல்லப்படுகிறது. ஆஸ்டெக் புராணங்களில் குவாட்செல்கோட் என்ற பறவை சொல்லப்படுகிறது. அமெரிக்க புராணங்களில் ராவன் ஆகிய பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து புராணங்களில் அன்னம், சக்கரவாகம், அன்றில் போன்ற பறவைகள் குறிப்பிடப்படுகின்றன.

காலணிகளின் விலை ரூ.37.75 லட்சம்

எவ்வளவு விலை உயர்ந்த காலணியாக  இருந்தாலும், அல்லது ஷூவாக இருந்த போதிலும் அதிகபட்சமாக சில ஆயிரங்கள் இருக்கக் கூடும். ஆனால் பல லட்சத்துக்கு காலணிகள் விற்றது என்றால் அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா...நைக் நிறுவனம் தயாரித்துள்ள அந்த ஷூவானது 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மராத்தான் போட்டியில் பங்கேற்றது என்ற பெருமையை பெற்றதாகும். இதையடுத்து இந்த  ஒரு ஜோடி காலணிகள் இந்திய மதிப்பில் ரூ.37.75 லட்சம் தொகைக்கு விற்பனையாகி உலக பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதிநவீன விமானம்

தற்போது ஒரு அடுக்கும் விமானம் மட்டுமே உள்ள நிலையில், மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இதில் 250 பேர் ஒரு நேரத்தில் பயணம் செய்ய முடியும். இந்த விமானத்தில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago