முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குழந்தைகளின் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகம்

மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 என்பது பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் குழந்தை பிறந்தவுடன் அதன் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். வளர்ந்த மனிதனின் உடலில் காணப்படுவதைப் போல அல்லாமல் குழந்தையின் உடலில் 300 எலும்புகள் காணப்படும். மனிதன் வளர வளர அவற்றில் ஒரு சில எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுதியில் 206 என்ற எண்ணிக்கைக்கு வந்து விடுகின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்..

எலிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு

இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.  ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை. வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.

உலகின் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா?

உலகில் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா.. இந்தியாவில்தான். குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும். 182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவற்றை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 ஆவதாக சீனாவில் உள்ள ஸ்பிரிங் கோயிலில் உள்ள புத்தர் சிலை 128 மீட்டர் உயரமும், 3 ஆவதாக சீனாவில் நன்சானில் உள்ள 108 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு புத்தர் சிலையும் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்காவின் 93 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திர தேவி சிலைக்கு 4 ஆவது இடமே கிடைத்துள்ளது.

Hiccups, விக்கல்

ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...  நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

நிறம் மாறிய பூக்கள்

கால நிலை மாற்றத்தால் பூக்களின் நிறங்களும் மாறி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதற்காக நீங்கள் பரிசளிக்கும் ரோஜாவின் நிறம் ஒரே இரவில் மாறிவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் கால நிலை மாற்றத்தால் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக புற ஊதா கதிர்களின் வீச்சு காரணமாக இது போன்ற மாற்றங்கள் தாவரங்ளில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து கடந்த 2020இல் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள கிளம்சன் பல்கலை நடத்திய ஆய்வில் புற ஊதா கதிர்கள் பூக்களின் வண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இவ்வாறு ஏற்பட்டுள்ள வண்ண மாற்றத்தை நமது வெறும் கண்களால் உணர முடியாது. ஆனால் அதே நேரத்தில் மகரந்த சேர்க்கைக்காக ஈர்க்கப்படும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது என்பதும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.

தலையில் இயற்கையான டார்ச் லைட்டை சுமக்கும் மீன்

ஆழ்கடல் அதிசயங்கள் தேட தேட தீராதவை. ஆழ்கடலுக்குள் 3 ஆயிரம் அடி ஆழம் வரை சூரிய ஒளி செல்ல முடியாது என்பதை நாம் அறிவோம். அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு தகவமைப்புகளை ஆழ்கடல் உயிரினங்கள் கொண்டுள்ளன. அவற்றில் மின்சார மீன், ஒளிரும் ஆக்டோபஸ் போன்ற உயிரினத்தை போலவே மற்றொரு அதிசயத்தையும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அது anglerfish எனப்படும் ஆழ்கடல் மீன் இருட்டை சமாளிக்க புதிய உத்தியை கையாள்வதாக தெரியவந்துள்ளது. இதன் தலைப்பகுதியில் போட்டோ பாக்டீரியா எனப்படும் ஒளிரும் பாக்டீரியாக்களை கவர்வதன் மூலம் ஒளியை உமிழச் செய்கின்றன என தெரியவந்துள்ளது. இது தலையில் டார்ச் லைட்டை பொறுத்தியது போன்ற தோற்றத்தையும் அதற்கு அளிக்கிறது. இயற்கை எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago