முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வங்கி கணக்கை பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்

நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கியதிலிருந்தே எந்தவித பண பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கிறீர்களா? அப்போ இந்த தகவல் கண்டிப்பா உங்களுக்கு தான் பயன்படும்.  பொதுவாக எந்த வங்கியில் நீங்கள் சேமிப்பு கணக்கு தொடங்கினாலும் அதில் 1 வருட காலம் வரை நீங்கள் வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் உங்களது சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும். அதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இதே போல் வங்கியில் பண பரிவர்த்தனை எதுவும் செய்திடாத நிலையில் உங்களது வங்கி கணக்கு "DORMANT(செயலற்ற நிலை)" நிலைக்கு சென்றுவிடும்.  வங்கி கணக்கு நம்முடைய தேவைக்கு தானே, அதில் ஏன் இத்தகைய செயல்முறை என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் இது தான் அனைத்து வங்கிகளிலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் விதிமுறை ஆகும். இதனால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற பயம் உங்களுக்கு தேவையில்லை.  இதனால் உங்கள் CIBIL ஸ்கோர் ஒருபோதும் பாதிக்கப்படாது.

ரயிலை தூக்கிச்செல்லும் விமானம் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியம்

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும்.  ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும்.

பருக்களை அகற்ற...

ஒரு துணியில் ஜஸ்கட்டியை வைத்து பருக்கள் சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால் பருக்கள் மறையும். பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது பருக்கள் மீது தடவி மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போயிடும்.

மிகப்பெரிய நகரம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையவுள்ளது.  சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா , சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.

கோடையில் 15 செமீ உயரம் வளரும் ஈபில் கோபுரம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் அமைந்திருக்கும் மிகப் பெரிய ஈபில் கோபுரம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். சுமார் 18 ஆயிரம் எஃகு துண்டுகளை 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைத்து இந்த 324 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரத்ைத அமைத்தனர். இது உலக அதிசயங்களில் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில் இந்த கோபுரம் 15 செமீ கூடுதலாக வளர்ந்து விடும் என்றால் ஆச்சரியம் தானே.. ஏன் என்கிறீர்களா, இது முழுக்க முழுக்க உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் எஃகு விரிவடைந்து ஒட்டுமொத்தமாக இதன் உயரமும் அதிகரித்து விடுகிறது. விரிவடையும் போது பாதிக்கப்படாத வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடலாமா

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம். சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு தொண்டைப் புண்ணும் குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்