முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மின்னல் மனிதனுக்கு முதுகெலும்பு பாதிப்பு இருந்தது தெரியுமா?

உலகின் மின்னல் மனிதன் என்று அழைக்கப்படுபவர் உசைன் போல்ட்.  அதிவேக ஓட்டக்காரரரான இவரது உச்சபட்ச ஓட்ட வேகம் மணிக்கு சுமார் 44 கிமீ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இவருக்கு scoliosis முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளது. இது குறித்து இவரே ஒரு பேட்டியில் எனது முதுகெலும்பு கடுமையாக வளைந்துள்ளது. இதனால் ஏற்படும் அவஸ்தைகளை நான் பொருட்படுத்துவதில்லை. அதை மீறியே கடுமையாக உழைக்கிறேன் என்கிறார். வெற்றி யாருக்கும் சும்மா கிடைப்பதில்லை என்பதற்கு உசைன் போல்ட் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.

புதிய முயற்சி

பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. அப்போது, 245 பேர் இணைந்து ஒரே நேரத்தில் பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடைபயிற்சியால் நன்மை

உயிர்கொல்லி நோயான புற்று நோயில் இருந்து உயிரை காப்பாற்ற நிபுணர்கள் புதிய வகையான சிகிச்சையை கண்டறிந்துள்ளனர். அதாவது தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் மரணத்தில் இருந்து புற்று நோயாளிகள் தப்பிக்க முடியும். இந்த ஆய்வு அமெரிக்க புற்றுநோய் சங்கம் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டது அதன்படி 992 குடல் புற்று நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் தினமும் 25 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களின் மரணம் 42 சதவீதம் குறைந்து இருந்தது. எனவே தினமும் 25 நிமிடம் நடை பயிற்சி மேற்கொண்டால் புற்று நோயாளிகள் சாவில் இருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னையே ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற நைஜீரிய வாலிபர் கைது

ஆடு, மாடுகளை விற்பது போல மனிதர்களை விற்பனை செய்வது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள ஒன்றாகும். இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் அரிதான வன விலங்குகளை வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம். ஆனால் நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கனோ மாகாணத்தின் Kaduna நகரில் உள்ள 26 வயதான Aliyu Na Idris என்ற வாலிபர் ஒருவர் தன்னையே விற்பனை செய்வதாக விளம்பரம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதன் மூலம் அந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் விலை என்று போர்டில் எழுதி அதை கையில் பிடித்தபடி படத்துக்கு போஸ் கொடுத்தார். தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் உதவ முடியும் என்று நம்பினார். இதையடுத்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

இவரை தெரியுமா?

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இனி இவரது சம்பளம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக இருக்கும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago