முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில், எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் ப்ளூடூத் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் என்பதோடு காற்றில் எவ்வித உதவியும் இன்றி மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் எல்ஜி Pj9  என பெயரிடப்பட்டுள்ளது.

இடது கை பழக்கம் உள்ளவர்கள் மரணம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

நம்மில் பலரையும் நாம் பார்த்திருக்க கூடும். அவர்கள் நம்மை போல அல்லாமல் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். இடது கையால் எழுதுவது, இடது கையால் வேலைகளை செய்வது, சாப்பிடுவது. அவ்வளவு ஏன் நமது கிரிக்கெட் வீரரான சிகர் தவான் போன்றவர்கள் விளையாட்டில் கூட பட்டையை கிளப்புவதை பார்த்திருக்கலாம்... ஆனால் ஒன்று தெரியுமா இந்த உலகம் வலது கை பழக்கமுடையவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கை பழக்கமுடையவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வலது கை காரர்கள் உருவாக்கிய கருவிகளால் சுமார் 2500 பேர் வரை இடது கை பழக்கமுடையவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு உலகம் பாருங்கள்.

நினைப்பதை டைப் செய்யும்

தீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாமல் தவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளனர். இதற்காக மின்சார தாக்குதலால் கை- கால் செயலிழந்த மற்றும் வாய் பேச முடியாத ஒருவரை வைத்து ஆராய்ந்ததில் அவர் மனதில் ஏற்படும் உணர்வை கம்ப்யூட்டர் கிரகித்து அதை டைப் செய்கிறது. இந்த கருவியை தலையின் மேல் பகுதியில் பொருத்திக்கொண்டால் போதும். அது, மூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாக கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது. இது பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இணைய அடிமை

இந்தியாவில் சுமார் 90% இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்களாம். இதன்மூலம் சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள், வழக்கத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாகவே தூங்க செல்கின்றனர். இதன்மூலம் தூக்க குறைபாடு, மன அழுத்தம், சோர்வு போன்ற நோய்களுக்கு ஆளாவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு அணுகுண்டு வீச்சில் தப்பியவர்

உலக வரலாற்றில் 1945 ஆகஸ்ட் 9 ஐ மக்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதே போல மறுநாள் ஆகஸ்ட் 10. ஏன்? கொடிய அமெரிக்கா உலகையே உலுக்கும் வகையில்  ஜப்பான் மீது அணுகுண்டு வீசி தாக்கிய நாள். அணுகுண்டை இனி பயன்படுத்தினால் உலகம் என்னவாகும் என்பதற்கு துயர சாட்சியாக நின்ற நாள். சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்தனர். தலைமுறை தலைமுறையாக அதன் கதிர்வீச்சு பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் ஒரு அதிசயம் நடந்தது. அணுகுண்டு வெடித்த போது சற்று தொலைவில் இருந்த ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் தனது 93 வயது வரை வாழ்ந்து அந்த துயர சம்பவத்தின் உயிர் சாட்சியாக  விளங்கினார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி. அணுகுண்டு வெடித்த போது அவருக்கு வயது 29. கடந்த 2009 இல் தனது 93 வயதில் சிறுநீரக மற்றும் வயிற்று புற்றுநோயால் மறைந்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள்.

நானோ சார்ஜ்ர்

ஸ்மார்ட்போனில் சார்ஜ் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ஒருசில வினாடிகளில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. 'பிளக்சிபிள் சூப்பர் கெபாசிட்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்தி ஒருசில வினாடிகளில்  அதை சார்ஜ் செய்து விடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!