முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தீபாவளி ஓர் ஆச்சரியமான செய்தி

19 ஆம் நூற்றாண்டு வரை தமிழின் எந்த இலக்கிய ஆவணத்திலும் தீபாவளி என்ற சொல் கிடையாது. வட நாட்டில் இருந்தும், விஜயநகர பேரரசின் போதும் தமிழகத்துக்கு தீபாவளி வந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தீபாவளியை இந்துக்கள் தவிர சமணர்கள், புத்தர்கள் மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகின்றனர்.1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். எது எப்படியோ இன்றைக்கு தீபாவளிக்கு புத்தாடை புனைந்து, பலகாரங்கள் செய்து, புதுப்படம் ரீலிஸ் செய்தால்தான் தமிழனின் தீபாவளி நிறைவு பெறும்.

வலிமை ஆக்கும்

சுகா ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், தேகம், மனம், பிராணன், புலன்கள் சோர்வடையாது. உடலின் கீழ் பகுதியும், இடுப்பும் நரம்புகளும் பலப்படுத்தப்படும். முதுகுத்தண்டும் பலப்படுத்தப்படுகிறது. சுகாசனத்தால், தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது. பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம்.

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

அதிசய வானவில் கிராமம்

 ரெயின்போ வில்லேஜ் அல்லது வானவில் கிராமம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா.. தற்போது உலகம் முழுவதையும் கவர்ந்துள்ள அந்த கிராமம் ஒரு முதியவரால் உலகத்தின் கவனத்தை பெற்றது என்றால் ஆச்சரியம் தானே.. அவர் பெயர் Huang Yung-fu, அந்த கிராமம் Taichung அமைந்துள்ள இடம் தைவான். 2 ஆம் உலகப் போர் கால கட்டத்தில் சீனாவிலிருந்து பிரிந்து வந்த சிலருக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராணுவ குடியிருப்புகள் அமைந்த இடம் தான் Taichung. அண்மையில் இதை இடித்து விட்டு மால் கட்ட அரசு முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து 97 வயதான Huang Yung-fu மட்டும் வெளியேற மறுத்து விட்டார். அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் வலிமையை இழந்து விட்ட முதியவர் Huang Yung-fu தன் கையில் எடுத்தது தூரிகையை. அந்த கிராமத்தின் அனைத்து சுவர்களை மூலை முடுக்குகளையும்,இண்டு இடுக்குகளையும் தனது கலை திறமையால் அற்புதமான ஓவிய கூடமாக மாற்றினார். பார்ப்பவர்களை கவரும் வானவில் கிராமமாக மிளிர்ந்தது. இதை கேள்விபட்ட பொது மக்கள் அங்கு வந்து இவற்றை படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விட்டனர். தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரும் பிரபல சுற்றுலா தளம் என்ற பட்டியலில் அந்த கிராமம் இடம் பெற்றது. இதையடுத்து அதை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு அரசே இப்போது தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறது. தூரிகையின் வலிமையை இந்த உலகுக்கு புரிய வைத்தவர் Huang Yung-fu.

எடை குறைய

கொக்கோ பவுடரில் சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இதய நோய்களை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் உள்ளன. கொக்கோ பவுடர் சற்று கசப்பாக இருக்கும். கொக்கோ பவுடரைக் கொண்டு வீட்டிலேயே ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் தயாரித்துக் குடித்தால் விரைவில் எடையை குறைக்கலாம்.

வழி இருக்கு...

நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.       மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை.   இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!