முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பரத்வாஜாசனம்

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் எளிய ஆசனம்தான் பரத்வாஜாசனம்.  இந்த ஆசனம் செய்வதால், முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலிமையூட்டப்படுகிறது. முதுகு வலியை கட்டுப்படுத்தி, முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது இந்த ஆசனம்.

புதிய கண்டுபிடிப்பு

கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரோடியம் என்ற நுண்துகள் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினையால் உலக அளவில் ஏற்படும் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்கும் கார்பன் டை ஆக்சைடினை மீத்தேனாக மாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விநோத திருமணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் உள்ள பால்டிமோர் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டின் வாக்னர் என்ற பெண் பீட்சாவின் மேல் உள்ள விருப்பத்தால், அதை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி திருமண கோலத்தில் ஆடையை உடுத்திக்கொண்டு, பீட்சாவுக்கும் டை கட்டி மாப்பிள்ளை போன்று அலங்கரித்துள்ளார். இதன் பின்னர் பீட்சாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, எனக்கு திருமணம் நடந்துவிட்டது, ஆண்களே என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.  இதனைப்பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர் போட்டோ ஷீட் ஒன்றினையும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது போல் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த  2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கோபுரத்தின் நிழல் தலைகீழாக தெரியும் அதிசய கோயில்

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பண்டைய கட்டிட கலைக்கு சாட்சியமாக விளங்குபவை கோயில்கள். அதிலும் இன்று வரையிலும் பல்வேறு விற்பன்னர்களாலும் அவிழ்க்க முடியாத கட்டிட கலை நுட்பங்களை அவை தங்களுக்குள் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இக்கோயிலில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா.. எப்படி தஞ்சை பெரிய கோயிலில் கோபுரத்தின் நிழல் கீழே விழாதோ... அதே போலு இந்த கோபுரத்தின் நிழல் கிழே விழும்போது தலைகீழாக தெரியும். அதாவது ஒரு லென்ஸ் வழியாக கோபுரத்தை படம் பிடித்தால் எப்படி தலைகீழாக காட்சி அளிக்குமோ அது போல அதன் நிழல் அங்குள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கோபுரத்தின் தலை கீழாக விழுவதை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். எந்த ஒரு இடை ஊடகமும் இல்லாமல் நிழல் தலைகீழாக மாற என்ன காரணம்?  இதுவரை யாருக்கு புரியாத புதிராக உள்ளது இந்த மர்மம்.

ஷாம்பூவை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர்.  இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..

திருட்டை தடுக்க

டிஸ்யூ பேப்பர் திருட்டை தடுக்க பெய்ஜிங் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் அதிநவீன முறையில் முகத்தை ஸ்கேன் செய்யும் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் கழிப்பிடத்துக்கு வருபவர்களை ஸ்கேன் செய்த பின்னரே 2 அடி நீளத்துக்கு டிஸ்யூ பேப்பர் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!