முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கோபி மஞ்சூரியன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கோபி மஞ்சூரியன் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியா நறுக்கிய காலிப்ளவ்ர் -1.
  2. மைதா மாவு - 2 ஸ்பூன்.
  3. அரிசி மாவு - ஒரு ஸ்பூன். 
  4. கான்பிளவர் மாவு  - 1/2 கப்.
  5. மிளகுதூள் -  1/4 ஸ்பூன். 
  6. எண்ணெய் - 2 ஸ்பூன். 
  7. பூண்டு – 3.
  8. நறுக்கிய பச்சை மிளகாய் -  4.
  9. பொடியா நறுக்கிய  குடைமிளகாய்  - 1.
  10. பொடியா நறுக்கிய  தக்காளி  - 1.
  11. இஞ்சி,பூண்டு விழுது -2 ஸ்பூன்.
  12. ரெட் சில்லி சாஸ்  - ஒரு ஸ்பூன் 
  13. ஸ்கெட்சப்  - 2 ஸ்பூன் .
  14. சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்.
  15. சர்க்கரை - ஒரு ஸ்பூன்.
  16. வெள்ளை மிளகுதூள் -  ஒரு ஸ்பூன். 
  17. ஸ்பிரிங் ஆனியன்  - 1/2 கப்.
  18. மல்லி இலை - சிறிதளவு.
  19. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்புல் கடாய் வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு காலிபிளவரை துண்டு துண்டாக வெட்டி போட்டு 5 நிமிடம்  வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மைதாமாவு,1/2 கப் கான்பிளவர் மாவு,ஒரு ஸ்பூன் அரிசிமாவு,தேவையான அளவு உப்பு,1/4 ஸ்பூன் மிளகுதூள்,100 மில்லி தண்ணிர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் வேக வைத்த   காலிபிளவரை போட்டு கலந்து விடவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து  சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன், மசாலா கலந்து  வைத்த காலிபிளவரை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். 
  6. திருப்பி போட்டு  வறுக்கவும்.  நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன்  எண்ணெய்யை  ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன்,பொடியாக நறுக்கிய 3 பூண்டு,நறுக்கிய பச்சை மிளகாய் 4,பொடியா நறுக்கிய  ஒரு குடைமிளகாய் ,பொடியா நறுக்கிய ஒரு  தக்காளி, 2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
  9. இதனுடன்  ரெட் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்,ஸ்கெட்சப்  2 ஸ்பூன்,சோயா சாஸ் ஒரு ஸ்பூன்,சர்க்கரை ஒரு ஸ்பூன், வெள்ளை மிளகுதூள்  ஒரு ஸ்பூன்,தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  10. இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு கடாயை மூடி 5 நிமிடம் வேக விடவும்,5 நிமிடம் கழித்து மூடியை திறந்து எண்ணெயில் பொரித்த காலிபிளவரை போட்டு கிளறி விடவும்.
  11. இதனுடன் 1/2 கப் ஸ்பிரிங் ஆனியன் மற்றும் சிறிதளவு மல்லி  இலையை போட்டு கலந்து விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான கோபி மஞ்சூரியன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்