முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் சாசேஜ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் சாசேஜ் செய்யத் தேவையான பொருட்கள்.

 1. சிக்கன் - ஒரு கிலோ.
 2. பொடியாக நறுக்கிய கேரட் -2.
 3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.
 4. பிரியாணி இலை - 2.
 5. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1
 6. புட் ஜெலட்டின் பவுடர் - 50 கிராம்.
 7. பீட்ருட் - 2.
 8. மிளகுத்தூள் – 2 ஸ்பூன்.
 9. உப்பு தேவையான - அளவு. 
Method: 

செய்முறை ;--

 1. அடுப்பில் கடாய் வைத்து ஒரு கப்  தண்ணீர்  ஊற்றவும்,இதனுடன் பொடியாக நறுக்கிய 2 கேரட்,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் , பிரியாணி இலை 2,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும்  ஒரு கிலோ சிக்கனை போட்டு கடாயை மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
 2. 10 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கலந்து விட்டு ஒரு பாத்திரத்தில் வடி கட்டி  சாறை  தனியாக எடுத்து அதில் புட் ஜெலட்டின் பவுடர்  50 கிராம் போட்டு நன்றாக கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
 3. சிக்கனில் உள்ள எலும்புகளை நீக்கி  தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
 4. இரண்டு பீட்ருட்டை துருவி சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிழிந்து     பீட்ருட் சாறு எடுத்து அதை வடி கட்டி  தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 5. ஒரு பாத்திரத்தில்,வேக வைத்து வடி கட்டி  எடுத்து வைத்துள்ள சிக்கன்,கேரட்,வெங்காயம் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்,இதனுடன் 2 ஸ்பூன் மிளகுத்தூள் தூள் மற்றும் 
 6. தேவையான அளவு உப்பு போட்டு வடி கட்டி  தனியாக எடுத்து வைத்துள்ள பீட்ருட் சாறையும்,சிக்கன் வேக வைத்த நீரையும் ஊற்றி கலந்து விடவும்.
 7. ஒரு மிக்சி ஜாரில் அனைத்தையும் போட்டு நன்றாக  அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 8. ஒரு பெட் பாட்டிலை எடுத்து பாதியாக அறுத்து அதன் மேல் பகுதியை நீக்கி விட்டு கீழ் பகுதியில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி அதன் மேல் சில்வர் பேப்பர் வைத்து மூடி கலவை வெளியே வராத படி நன்றாக கட்டி   இரவு முழுவதும்  பிரீசரில் வைக்கவும்.
 9. மறுநாள் பெட் பாட்டிலை அறுத்து உள்ளே உள்ள சிக்கன் சாசேஜ்யை பிரித்து எடுத்து சிறு சிறு துண்டாக வெட்டி பரிமாறவும்.
 10. சுவையான சிக்கன் சாசேஜ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்