முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில்லி கார்லிக் சீஸ் பிரெட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சில்லி கார்லிக் சீஸ் பிரெட் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பிரட் துண்டுகள் - 8.
  2. இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  3. சில்லி பிளக்ஸ் - 1 ஸ்பூன்.
  4. மல்லி இலை - சிறிதளவு.
  5. மிளகு தூள் - 1 ஸ்பூன்.
  6. ஓரிகானா - 1 ஸ்பூன்.
  7. பட்டர் - 100 கிராம்.   
  8. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 6.
  9. துருவிய சீஸ் - சிறிதளவு. 
  10. சுவீட் கான் - சிறிதளவு.
Method: 

செய்முறை ;--

ஒரு பாத்திரத்தில் இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,சில்லி பிளக்ஸ் ஒரு ஸ்பூன்,மல்லி இலை சிறிதளவு,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,ஓரிகானா ஒரு ஸ்பூன்,பட்டர்  100 கிராம் மற்றும் பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாயை போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் 8 பிரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு 4 பிரட் துண்டுகளில் தயார் செய்து வைத்துள்ள கலவையை பிரட் துண்டின் மேல் புறமும் நன்றாக தடவி வைத்துக்கொள்ளவும்.  

இதை போல் 4 பிரட் துண்டின் மேல்புறம் கலவையை நன்றாக தடவி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.  

பிரட் துண்டின் மேல்புறம் சிறிதளவு துருவிய சீஸை தூவி விட்டு,சிறிதளவு சுவீட் கான் மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு பச்சை மிளகாயை தூவி விடவும்.

இதை போல் 4 பிரட் துண்டுகளையும் தயார் செய்து  வைத்துக்கொள்ளவும்.  

இந்த பிரட் துண்டின் மேல் இன்னொரு பிரட் துண்டை வைத்து அதன் மேலும் கலவையை தடவி வைத்துக்கொள்ளவும்.  

அடுப்பில் கடாய் பிரட் துண்டுகளை வைத்து அதன் மேலும் கலவையை தடவி விட்டு நன்றாக வேக விடவும்.

திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.

இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

சுவையான சில்லி கார்லிக் சீஸ் பிரெட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்