முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில்லி சப்பாத்தி

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சில்லி சப்பாத்தி செய்யத்தேவையான பொருட்கள்.

கோதுமைமாவு - 1 கப்.

உப்பு - தேவையான அளவு.

எண்ணெய் - தேவையான அளவு.

பொடியாக நறுக்கிய வெங்காயம் -3.

பொடியாக நறுக்கிய தக்காளி - 3.

இஞ்சி,பூண்டு விழுது -1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய் 2.

மல்லி இலை - சிறிதளவு.

 

Method: 

 

செய்முறை ;-- 

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமைமாவு,மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும், பின்னர் மாவை 20 நிமிடம் ஊற வைக்க்கவும்.
  2. 20 நிமிடம் கழித்து மாவை எடுத்து சிறு சிறு உருடைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  3. சப்பாத்தி தேய்க்கும் பலகையில் மாவை சப்பாத்தி க்கு தேய்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. இதை போல் எல்லா சப்பாத்தி மாவையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  5. அடுப்பில் கடாய் வைத்து   2 ஸ்பூன்.  எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சப்பாத்தி மாவை   போட்டு வேக விடவும், திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. இதை போல் எல்லா சப்பாத்தி மாவையும் வேக வைத்து தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  8. வேக வைத்த சப்பாத்தியை சிறிது நேரம் ஆற வைத்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக செய்து வைத்துக்கொள்ளவும். 
  9. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு  எண்ணெய்யை ஊற்றவும்.
  10. எண்ணெய்யை  சூடானவுடன் பொடியாக நறுக்கிய 3 வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  11. இதனுடன் பொடியாக நறுக்கிய 3 தக்காளி,ஒரு ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது,மிளகாய் தூள் 2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய  2 பச்சை மிளகாய் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி  நன்றாக வதக்கவும்.
  12. இதனுடன் சிறு சிறு துண்டுகளாக செய்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டுநன்றாக கலந்து விடவும்.
  13. சிறிதளவு மல்லி இலையை  போட்டு நன்றாக கலந்து விடவும்.
  14. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  15. சுவையான சில்லி சப்பாத்தி ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்