முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சுண்டக்காய் புளிக்குழம்பு

Cooking time in minutes: 
45
Ingredients: 

சுண்டக்காய் புளிக்குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சுண்டக்காய் - ஒரு கைப்பிடி அளவு.
  2. புளி கரைசல் – சிறிதளவு.
  3. உப்பு தேவையான அளவு.
  4. மஞ்சள் தூள் - 2 சிட்டிகை.
  5. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  6. வெங்காயம் -1.
  7. தக்காளி -1.
  8. பூண்டு - 14 பல்.
  9. மிளகு - 10  
  10. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்.
  11. ரிபைன்ட் ஆயில் - 2 ஸ்பூன்.
  12. நல்லெண்னை - 4 டீஸ்பூன் ஸ்பூன்.
  13. பெருங்காயம் – சிறிதளவு.
  14. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
Method: 

செய்முறை ;

  1. தக்காளி,வெங்காயம்,பூண்டு 4 பல், 10 மிளகு, தேங்காய்துருவல்,இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ற்றவும்.
  3. எண்ணெய் சூடானவுடன் 10 பல் பூண்டு போட்டு வதக்கவும்.
  4. இடித்து வைத்த சுண்டக்காய் போட்டு வதக்கவும்.
  5. மிக்சியில் அரைத்து வைத்த பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
  6. ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
  7. மஞ்சள் பொடி 2 சிட்டிகை போட்டு கலந்து விடவும்.
  8. குக்கரை மூடி 3 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும்.
  9. அடுப்பில் வானொலியை வைக்கவும்.
  10. நன்கு காய்ந்த உடன் 4 டீஸ்பூன் நல்லெண்னை ஊற்றவும்.
  11. எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு போட்டு வதக்கவும்.
  12. சிறிதளவு பெருங்காயம்,சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  13. எலுமிச்சம் பழ அளவு புளியை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  14. கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
  15. சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  16. இதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் போட்டு 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
  17. கொத்தமல்லி சிறிதளவு போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
  18. சுவையான சுண்டக்காய் புளிக்குழம்பு ரெடி.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago