முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை பக்கோடா

Cooking time in minutes: 
20
Ingredients: 

முட்டை பக்கோடா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. முட்டை 5.
  2. கடலை மாவு - 1/4 கிலோ.
  3. அரிசி மாவு -ஒரு ஸ்பூன்.
  4. பேக்கிங் சோடா -  ஒரு சிட்டிகை.
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4.  
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி  - ஒரு துண்டு.
  7. பொடியாக நறுக்கிய - 3 பெரிய வெங்காயம்.
  8. மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
  9. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன். 
  10. பொடியாக நறுக்கிய  கறிவேப்பிலை - 20.
  11. எண்ணெய் - 1/2 லிட்டர். 
  12. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை:-

  1. ஒரு பாத்திரத்தில் 5 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதனுடன் 1/4 கிலோ கடலை மாவு,ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன் பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,பொடியாக நறுக்கிய 3 பெரிய  வெங்காயம்,மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய  கறிவேப்பிலை 20, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வடை மாவு பதத்திற்கு மாவை  தயார் செய்து வைத்துக்கொள்ளவும். 
  4. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிதளவு ஒரு ஸ்பூனில் எடுத்து  எண்ணையில் போட்டு வேக விடவும்.
  6. பக்கோடாவை திருப்பி போட்டு வேக விடவும்.
  7. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  8. இதேபோல் தயார் வைத்துள்ள எல்லா மாவையும் எண்ணையில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  9. சுவையான முட்டை பக்கோடா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago