முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

லெமன் ஜெல்லி

Cooking time in minutes: 
20
Ingredients: 

லெமன் ஜெல்லி செய்யத் தேவையான பொருட்கள்.

  1. எழுமிச்சம்பழம் - 10.
  2. கான் பிளவர் மாவு - 150 கிராம்.
  3. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்.
  4. சர்க்கரை - 150 கிராம்.
Method: 

செய்முறை ;--

  1. 10 எழுமிச்சம்பழத்தை எடுத்துக்கொண்டு அதை பாதியாக அறுத்து உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு சாறு பிழிந்து எழுமிச்சம்பழசாறை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் 150 கிராம் கான் பிளவர் மாவு மற்றும் ½ ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல்  நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு  தண்ணீர்  ஊற்றி,150 கிராம் சர்க்கரையை போட்டு நன்றாக கலந்து சர்க்கரை பாகை தயார் செய்து இதனுடன் எழுமிச்சம்பழ சாறு,கான் பிளவர் மாவு மற்றும் மஞ்சள் தூள் கலந்த கலவையை ஊற்றி கட்டி இல்லாமல்  நன்றாக கிளறி விடவும்.
  4. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி  சிறிது நேரம் ஆற வைத்து 3 தண்ணீர் கப்பை எடுத்துக்கொண்டு அதில் ஜெல்லி பேஸ்டை நிரப்பி அதன் மேல் சில்வர் பேப்பர் வைத்து மூடி கலவை வெளியே வராத படி ரப்பர் பேண்டை போட்டு  3 மணி நேரம்  பிரிட்ஜில்  வைக்கவும்.
  5. 3 மணி நேரம் கழித்து ஜெல்லி கப்பை வெளியே எடுத்து கப்பில் உள்ளஜெல்லியை ஒரு தட்டில் எடுத்து கொண்டு அதை சிறு சிறு துண்டாக வெட்டி பரிமாறவும்.
  6. சுவையான லெமன் ஜெல்லி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்