முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் சி.கதிரவன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி

தாட்கோ மூலம் ஆதிதிராவிட விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்; வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர் ஆதிதிராவிட விவசாயியாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் புகைப்படம், சாதிச் சான்று, குடும்ப அட்டை இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, கல்வி தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்று வாக்காளர் அடையாள அட்டை,ஃ பான் கார்டுஃ ஆதார் அட்டை மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு விண்ணபதாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டதற்கான நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல் மற்றும் புகைப்படத்தையும ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக தாட்கோ, மாவட்ட மேலாளர், கிருஷ்ணகிரி அலுவலகத்தில் ரூ.20- செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்துஆதிதிராவிட இனத்தை சேர்ந்த விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago