முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      இந்தியா
Suicide 2023 04 29

ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலக்கரி சுரங்கமானது உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று அதிகாலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதே சமயம், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து