எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தாவரவியல் ரீதியாக அசோலா ‘அசோலேசியே’ என்னும் குடும்பத்தை சார்ந்த தண்ணீரில் மிதக்கும் ஓர் பெரணி செடி ஆகும். அசோலாவின் இலைகள் முக்கோண வடிவிலோ அல்லது பலகோண வடிவத்திலோ அமைந்து பார்ப்பதற்கு மூக்குத்தி மற்றும் கம்மல் போன்று இருப்பதால் இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என ஊர்புறங்களில் அழைக்கப்படுவதுண்டு. அசோலா மிகச்சிறிய இலைகளையும் மெல்லிய வேர்களையும் கொண்டது.
இதன் தண்டு மற்றும் வேர்ப் பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். அசோலாவின் உள்ளே ‘அனபினா அசோலே’ என்ற நீலப்பசும்பாசி உள்ளது. நீலப்பசும்பாசி வளர்வதற்கு தேவையான உண வினை அசோலா கொடுக்கிறது. இந்த நீலப்பசும்பாசி காற்றில் உள்ள தழைச் சத்தினை (நைட்ரஜன்) கிரகித்து அசோலாவில் சேமித்து வைக்கிறது. இதனால் அசோலா கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த சத்தான உணவாக பயன் படுத்தப்படுகிறது.
அசோலாவின் தனிச்சிறப்புகள்
1. அசோலாவை எளிய முறையில் உற்பத்தி செய்யலாம். துரித வளர்ச்சித் திறனும் கொண்டது.
2. அசோலாவை பசுமையாகவோ அல்லது உலர்த்தியோ கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.
3. அசோலாவில் 25-35 சதவீதம் புரதச்சத்து 10-12 சதவீதம் தாதுக்கள் மற்றும் 7-10 சதவீதம் அமினோ அமிலம் மற்றும் இதனை சார்ந்த வளர்ச்சிதை மாற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.
4. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குiவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால் நடைத் தீவனமாக விளங்குகிறது.
5. அசோலா கால்டை மற்றும் கோழிகளின் உடல் நலத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களை கணிசமான அளவில் உள்ளடக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
அசோலா உற்பத்தி முறை : அசோலா குறைந்த வெப்பநிலையில் (25 முதல் 31 சென்டிகிரேட்) வளரும் தன்மை கொண்டதால் நிழலில் வளர்க்க வேண்டும். மர நிழலில் வளர்க்கும் போது சூரிய ஒளியானது அசோலா மீது மூன்று மணி நேரத்திற்கு மேல் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
படி-1: நிலத்தில் உள்ள களைச்செடிகளை அகற்றி நிலத்தைச் சமப்படுத்த வும் பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி 10. செ.மீ. உயரம். 2.25 மீ நீளம், 1.5 மீ அகலம் வரும்படி செங்கலை அடுக்கவும். புல் பூண்டுகள் வளர்வதை தடுக்கவும், சிறு கற்களால் சில்பாலின் சீட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் யூரியா சாக்கினை குழியில் பரப்பவும்.
படி- 2: பின்னர் 2.5 மீ நீளம், 1.8 மீ அகலம் உள்ள சில்பாலின் சீட்டை செங்கலின் மேல் சமமாக பரப்பவும். (150 தடிமன்களுக்கு மேல் உள்ள சில்பாலின் சீட்டை பயன்படுத்தவும்).
படி-3: சில்பாலின் மீது சுமார் 30-35 கிலோ நன்கு சலித்த வளமான மண்ணை சமமாக பரப்பவும்.
படி-4: இருநாட்களுக்கு முந்தையதாக இல்லாத சாணம் சுமார் 4-5 கிலோ அல்லது அதே அளவான சாண எரிவாயுக்கலனில் இருந்து வெளிவரும் கழிவை, 15-20 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். பின்னர் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீர் கரைத்து குழியில் ஊற்ற வேண்டும்.
படி-5: அசோலா குழியில் 10 செ.மீ உயரம் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். இரசாயன கழிவுகள் இல்லாத கழிவுநீர் மற்றும் மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரையும் அசோலா வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.
படி-6: சுமார் 1-1.5 கிலோ நோய் இல்லாத, பூச்சித்தாக்குதல் இல்லாத அசோலாவை (இதை விதை அசோலா என சொல்லலாம்) எடுத்து தண்ணீரின் மேல் எல்லா இடங்களிலும் சமமாக பரவும்படி தூவவும். ஒரு சில அசோலா பெரணிகள் தலைகீழாக விழுந்து இருந்தால் அவற்றின் மேல் சிறிதளவு நீரை தெளித்தால் போதும். அவை நேராகி விடும்.
படி-7: அசோலா விதைத்த 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும். நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை தினந்தோறும் அறுவடை செய்யலாம்.
பராமரிப்பு:- தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலி;த வளமான மண்ணை இட வேண்டும். அசோலா விதைகளை தவிர ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து இருபொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.
அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்:- 1 சதுர செ.மீ. துளை உள்ள பிளாஸ்டிக் டிரே கொண்டு அரித்து எடுத்த அசோலாவை பாதியளவு தண்ணீர் கொண்ட பிளாஸ்டிக் பக்கெட்டினுள் போடவும். பின்னர் சாணத்தின் வாசனை போகும் அளவு நன்றாக கழுவவும். அசோலாவை கழுவ பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் அசோலா பாதியிலேயே விட்டு விடலாம்.
இவ்வாறு நன்கு கழுவிய அசோலாவை 1:1 என்ற விகிதத்தில் செயற்கை தீவனங்களோடு கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்கலாம். கோழி களுக்கு அசோலாவை அப்படியே உண்ண கொடுக்கலாம். இருந்தாலும் நாம் எப்போதும் கொடுக்கும் தீவனங்களோடு சேர்த்து கொடுக்க ஆரம்பித்து அவை பழக பழக தீவன அளவை குறைத்து அசோலா அளவைக் கூட்டிக்கொண்டெ வரலாம். கால்நடைகள் அசோலாவை நன்கு சாப்பிடப் பழகிய பின்னர் செயற்கைத் தீவ னங்கள் சேர்க்காமலேயே நேரடியாக அசோலாவையே கொடுக்கலாம்.
பரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிக்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு), பசுமாடு, உழவுமாடு -1.5 - 2 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி 20-30 கிராம், ஆடு -300-500 கிராம், வெண்பன்றி 1-1.5 கிலோ, முயல் 100 கிராம்,
பயன்கள் : கறவை மாடுகளில் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்ப துடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலில் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின் அளவும் 3 சதவீதம் வரை கூடுகிறது.
அசோலா உட்கொள்ளும் கால்நடைகள் மற்றும் கோழிகளின் எடை கூடுகிறது. கோழிகளின் முட்டையில் உள்ள மஞ்சள் கரு திடமாக காணப்படும்.
கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அசோலாவை தீவனமாக அளிக்கும் போது 20 விழுக்காடு வரை அடர் தீவனத்தை சேமிக்கலாம்.
அசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு : பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.
தொகுப்பு : ஜெயந்தி, ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி, சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் இருவர் கைது
02 Jul 2025சென்னை : ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வ
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.