Idhayam Matrimony

பா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும் என தம்பிதுரை எம்.பி கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வே  மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்த நேரத்தில், எந்தவித எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல், அவருக்கு உரிய அரசு மரியாதையை வழங்கியது.

கடலில் கரைத்த பெருங்காயம்...

 அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நேற்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- தமிழகத்தை ஆளும் அ.தி. மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மக்கள் செல்வாக்கற்ற, போராட்டங்களை தி.மு.க. திட்டமிட்டு நடத்தி வருகிறது. அவர்கள் நடத்தும் தேவையற்ற போராட்டங்கள் அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் விரைவில் மறைந்துவிடும்.

மக்கள் முன்வரவில்லை.

காவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் இணக்கமான முடிவுகளை எடுத்துவரும்போது, கூட்டணி கட்சிகளின் துணையோடு போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை கலாச்சார விதைகளை தமிழகத்தில் தூவிவிடும் முயற்சியில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. சுயநலங்களோடு தி.மு.க. நடத்துகிற போராட்டங்களை, தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான், போராட்டங்களுக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் முன்வரவில்லை.

கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கத்தான் போகிறது. அதில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டத்தான் போகிறார்கள். அதற்காகத்தான் தமிழக அரசும் பொறுமை காக்கிறது. மக்கள் ஆதரவற்ற தி.மு.க.வின் போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய வண்ணம் இருக்கிறது.

இணைந்து  இறுதி முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்சினையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் தி.மு.க., தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.

உறவை  பிரிக்க முடியாது

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தம்பித்துரை மறுப்பு

ஆனால் இதனை  துணை சபாநாயகர் தம்பி துரை மறுத்து உள்ளார். காவிரி விவகாரத்தில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும். பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து