முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      உலகம்
Nermala 2024-12-21

Source: provided

ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 'பிரிக்ஸ்' (BRICS) நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ரஷ்யா மற்றும் சீனாவின் நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா மற்றும் இந்தியா-ரஷ்யா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ரஷ்ய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். பின்னர் அவர்கள் இந்தியா-ரஷ்யா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.

இதே போல் சீன நிதி அமைச்சர் லான் போனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து நிர்மலா சீதாராமன் விவாதித்தார். உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களாக இரு நாடுகளும் இருப்பதால், உள்ளார்ந்த உலகளாவிய வளர்ச்சி மற்றும் புதுமைகளை அடையக் கூடிய நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன என்று அவர் கூறினார்.  இதைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து