முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களுக்கு, செயல்திறன் தர மதிப்பீடும் உள்ளது.

தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுத்து விடுவதால் சாலைப் பாதுகாப்பு என்ற நோக்கத்தை சிதைப்பதாக அவை இருக்கின்றன. இதை நிவர்த்தி செய்வதற்காக, 2021-ம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது. இது அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் பி.ஐ.எஸ். தரநிலைகளின் கீழ் (ஐஎஸ் 4151:2015) சான்றளிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தரநிலைகளைச் செயல்படுத்த, பி.ஐ.எஸ். அமைப்பு வழக்கமான தொழிற்சாலை மற்றும் சந்தை கண்காணிப்பை மேற்கொள்கிறது. இதன் மூலம் தரமற்ற தலைக் கவசங்கள் உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தரமற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், சாலை விபத்தால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதையும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து