Idhayam Matrimony

குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      இந்தியா
Rahul 2024-09-09

பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அரசை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“பீகாரை ஆட்சி செய்யும் பா.ஜ.க.-நிதிஷ்குமார் கூட்டணி, நாட்டின் குற்ற தலைநகராக பீகாரை மாற்றியுள்ளது. தொழிலதிபர் கோபால் கெம்கா வெளிப்படையாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமே இதற்கு உதாரணம். கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு போன்ற குற்றச் சம்பவங்கள் பீகாரில் இயல்பாகிவிட்டது. இவற்றைத் தடுப்பதில் ஆளும் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

அச்சமற்ற, முன்னேற்றத்தை நோக்கிச் செல்லக்கூடிய புதிய பீகாருக்கான நேரம் இது. இந்த முறை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமல்ல; பீகாரை காப்பதற்கும்கூட” என ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து