Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      விளையாட்டு
Cricket

Source: provided

பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.

2-வது டெஸ்ட்...

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.

608 ரன் இலக்கு...

பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி கடைசி நாள் உணவு இடைவெளியின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது 

ஜேமி சுமித்  சாதனை...

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 184 ரன்கள் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 2-வது இன்னிங்சில் 22 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் (184+22 = 206 ரன்கள்) அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.

அந்த பட்டியல்...

1. ஜேமி சுமித் - 206 ரன்கள்*

2. அலெக் ஸ்டீவார்ட் - 204 ரன்கள்

3. ஜானி பேர்ஸ்டோவ் - 199 ரன்கள்

4. ஆலன் நாட் - 197 ரன்கள் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து