பார்லி. தேர்தலில் போட்டியிடும் இ. கம்யூ. வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரை -வெங்கடேசன், கோவை - பி.ஆர்.நடராஜன்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      அரசியல்
Communist- Madurai-Venkatesan-  Coimbatore - PR Nadarajan

சென்னை, பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் சு.வெங்கடேசன், கோவையில் பி.ஆர். நடராஜன் போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவித்தார். இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக தலைவர் பாலகிருஷ்ணன் நேற்று அறிவித்தார். கோவை தொகுதியில் முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜனும், மதுரை தொகுதியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசனும் போட்டியிடுவார்கள் என்று அவர் அறிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து