முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதாக கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவானது கடந்த ஏப். 15ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, வழக்கறிஞர் ஆனந்த் எஸ்.ஜோன்டேல் தாக்கல் செய்த மனுவில், பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது மத ரீதியாக பிரசாரம் செய்ததாகவும் இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என்பதால் பிரதமர் மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு நேற்று (ஏப். 26) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிபதி நேற்று விடுமுறையில் சென்றதால் வழக்கின் விசாரணயை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக இந்த வழக்கு ஏப்ரல் 26-ம் தேதி விசாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து