முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்சமாம் உல் ஹக் சாதனையை முறியடித்தார் ஸ்டீவன் சுமித்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வீரர் இன்சமாம் உல் ஹக் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 68.5 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் சுமித் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஒரு அணிக்கு (இங்கிலாந்து) எதிராக தொடர்ந்து 10 அரை சதங்களை அடித்து ஸ்டீவன் சுமித் சாதனை படைத்துள்ளார். எனவே இதற்கு முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 9 அரைசதங்களை அடித்த இன்சமாம் உல் ஹக் சாதனையை ஸ்டீவன் சுமித் முறியடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து