முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

புதன்கிழமை, 8 மே 2024      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

56-வது லீக் ஆட்டம்...

டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல்.போட்டியில் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

222 ரன் இலக்கு...

இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் பட்லர் 19 ரன்களிலும் அவுட்டானார்கள். அந்த சமயத்தில் தனி ஆளாக சாம்சன் போராடி வந்தார். அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடிய சாம்சன் 86 ரன்களில் இருந்தபோது, ஒரு பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது சிக்சர் லைனில் இருந்த ஹோப் பந்தை பிடித்து எல்லை கோட்டிற்கு அருகில் சென்று பின்னர் உள்ளே வருவார். 

ரீவ்யூ கேட்டார்...

அப்போது அவரது கால் எல்லை கோட்டை தொடுவது போல காட்சி தெரியும். உடனே இதனை பார்த்த சாம்சன் களத்தில் உள்ள நடுவரிடம் ரீவ்யூ கேட்டு முறையிடுவார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கள நடுவர்கள் கூறினர். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடத்தை மீறல்...

இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு அவுட் கொடுத்தது குறித்து களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து