முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்முலா1 கார் பந்தயம்: பிரேசில் கிராண்ட்பிரி போட்டியில் வெர்ஸ்டாப்பென் முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சாவ்பாலோ : கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது பார்முலா 1 பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இந்த போட்டியின் 20-வது சுற்றான பிரேசில் கிராண்ட்பிரி போட்டி சாவ்பாலோவில் நடந்தது. 305.909 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 33 நிமிடம் 14.678 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். பிரான்ஸ் வீரர் பியர்ரி காஸ்லி (டோரோ ரோஸ்சோ அணி) 2-வது இடம் பெற்றார்.

கடந்த சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டியிலேயே 6-வது சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் ரெட்புல் அணி வீரர் அலெக்சாண்டர் அல்போனின் காரை பந்தயத்தில் இடித்து தள்ளியதால் அவருக்கு போட்டி நடுவர் குழு 5 வினாடிகள் அபாரதமாக விதித்தது. இதனால் அவர் 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

எனவே அவருக்கு அடுத்தபடியாக வந்த ஸ்பெயின் வீரர் கார்லோஸ் சைன்ஸ் (மெக்லரன் அணி) 3-வது இடத்துக்கு முன்னேறினார். 20-வது சுற்று முடிவில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 387 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டஸ் 314 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். 21-வது மற்றும் கடைசி சுற்றான ஐக்கிய அரபு அமீரக கிராண்ட்பிரி போட்டி அபுதாபியில் டிசம்பர் 1-ம் தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து