Idhayam Matrimony

2 நாள் பயணமாக பிப். 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப் - வர்த்தக முன்னுரிமை குறித்து பிரதமருடன் பேச முடிவு

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகையின் போது அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் மீண்டும் இடம்பெறுவது குறித்து இந்தியா பேச்சு நடத்தவுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அதிபராக பதிவியேற்ற பின் டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கும் டிரம்ப், இந்தியாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தயிருக்கிறார். முக்கியமாக இந்த சந்திப்பின் போது, வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், கடந்த ஆண்டு எஃகு இறக்குமதிக்கு 25 சதவீதம் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதம் உலகளாவிய கூடுதல் கட்டணங்கள் விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக 28 தயாரிப்புகளுக்கு இந்தியா அதிக கட்டணங்களை விதித்தது.

இது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்றும், காஷ்மீர் உள்பட இந்திய உள்விவகாரங்களை குறித்து விவாதிக்கப்படாது என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததால் சமீபத்தில் அமெரிக்கா தனது வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பினை திரும்ப பெறுவது குறித்தும் டிரம்ப் பயணத்தின் போது பேசப்பட இருக்கிறது. அதிபர் டிரம்ப் இந்தியா வருகையின் எதிரொலியாக இரு நாடுகளுக்கு இடையே முந்தும் வர்த்தக முன்னுரிமை சார்ந்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான பிரட்சாரத்தை தொடங்குவதற்கு முன் இந்தியா உடனான வர்த்தக உடன்படிக்கையை உறுதி செய்வதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து