முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2026      தமிழகம்
DCM-1-2026-01-16

மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 1,000 காளைகள்  மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று முன்தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தன. 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டி துவங்கும் முன் முதலில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்றன ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள், இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச்சுற்றில் அதிக காளைகளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து