முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்

வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2026      இந்தியா
BJP 2023 04 10

மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி 130 வார்டுகளில் முன்னிலை பெற்று வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளது. 

மராட்டியத்தில் மும்பை, தானே, புனே, நாக்பூா், நவிமும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளின் பதவி காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை அடுத்து மாநில அரசியல் களம் சூடுபிடித்தது. மாநிலம் முழுவதும் அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 869 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க 15 ஆயிரத்து 391 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மும்பையில் மட்டும் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அனைத்து மாநகராட்சிகளிலும் 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு மாநில தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தது. இது நகர்ப்புற தேர்தல் என்பதால், தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் வாக்களிக்க படையெடுத்தனர். 29 மாநகராட்சிகளிலும் நடந்த வாக்குப்பதிவு மாலை 5.30 மணியுடன் முடிந்தது. 5.30 மணிக்கு வாக்குப்பதிவு மையத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு வந்தவர்களை அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வாக்குப்பதிவு நிறைவில் மும்பை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

இந்த சூழலில் அனைத்து மாநகராட்சிகளிலும் பதிவான வாக்குகள் நேற்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டன. காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மும்பையில் மட்டும் 23 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. கைப்பற்றியது. மும்பை மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. 

மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி 130 வார்டுகளில் முன்னிலை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவசேனா (உத்தவ்)-மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கூட்டணி 71 வார்டுகளிலும், காங்கிரஸ் 13 வார்டுகளிலும் முன்னிலை பெற்று வெற்றி பெறும் சூழலில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து