முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜன நாயகன், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 9 ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன. 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் பொங்கலன்று (ஜன.15) காலை விசாரித்தது. தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இது பட வெளியீடு தொடர்பான வழக்கு. 5000 திரையரங்குகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், மக்கள் காத்திருக்க முடியாது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என வாதிட்டார்.

எதிர்த்தரப்பில் ​​மத்திய தணிக்கை வாரியம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இதற்கு பதிலளித்த நீதிபதி தீபங்கர் தத்தா, “அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை தாக்கல் செய்த ஓரிரு நாள்களுக்குள் தீர்த்து வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இது எல்லா வழக்குகளிலும் நடக்க வேண்டும்.  உயர்நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதால், இதை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை. அதனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக” நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து