முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்

வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன். அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - திருவள்ளுவர்

1) சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். 2) வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள். 3)  இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். 4) தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள். இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து