எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- ' எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்... சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள்... அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் விழாவாக, எல்லோர் இதயங்களிலும், இல்லங்களிலும் எழுச்சி தரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை தமிழ் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
திரை உலகில் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட புரட்சித் தலைவர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதங்களாகப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம் புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில் எம்.ஜி.ஆருக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது.
ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், உழைப்பால் உலகை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்காகவும், நல் உள்ளத்தோடு பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். எம்.ஜி.ஆர். அத்தகைய ஒரு வரலாற்று மாமனிதர் மட்டுமல்ல, சரித்திர நாயகர்களுக்கெல்லாம் இல்லாத மேலும் பல சிறப்புகளைப் பெற்றவர் ஆவார்.
தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதம் தான் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்'. அந்த ஆயுதம் தான் சில சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தது. தமிழ் இனத் துரோகிகளின் சதித் திட்டங்களை உடைத்தெறிந்தது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஏழை, எளியோரின் வேதனைகளைத் தீர்க்கின்ற ஆட்சி; தாய்மார்களின் இதயங்களில் இன்பங்களைச் சேர்க்கின்ற ஆட்சி; நடுத்தர மக்களுக்கு நன்மைகளைத் தருகின்ற ஆட்சி; எல்லோரும், எல்லாமும் பெறுகின்ற ஆட்சி என்ற புதிய வரலாற்றை உருவாக்கியவர் நம் புரட்சித் தலைவர். அவர் உருவாக்கிய அந்த வரலாறை தமிழ் நாட்டின் வீர வரலாறாக, எவராலும் வீழ்த்த முடியாத வெற்றி வரலாறாக மாற்றிக் காட்டியவர் புரட்சித் தலைவி அம்மா.
எம்.ஜி.ஆர். தான் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரர். உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம்; பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தலைமுறை, தலைமுறையாக பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பலகோடி மக்கள் வாழ்வில் ஏற்றம்பெற, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு; கிராமப்புறங்களில் நிலவிய அடிமைத்தனங்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாக முறையை முற்றிலும் ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்னும் புதுப் பதவிகள் மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி; கம்ப்யூட்டர் காலத்திலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் அத்தனை எளிதாக செய்திட முடியாத அரும் பெரும் சாதனைகளாகும். எனவே தான், அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் வீற்றிருக்கிறார்.
புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் வழங்கிய மாபெரும் கொடையாக வந்தவர் புரட்சித் தலைவி அம்மா. புரட்சித் தலைவர் ஆட்சியின் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், புரட்சித் தலைவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், புரட்சித் தலைவரின்; புரட்சித் தலைவி அம்மாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவர்; புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.
ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம். பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! புரட்சித் தலைவி அம்மாவின் புகழ் ஓங்குக. நன்றி,வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


