ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் : இந்திய ஜோடி அஷ்வினி - சிக்கி தோல்வி

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2020      விளையாட்டு
Ashwini - Siky defeat 2020 03 13

லண்டன் : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய ஜோடியான அஷ்வினி - சிக்கி தோல்வியை சந்தித்தனர்.

இங்கிலாந்தில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டை பிரிவில் இந்தியாவின் அஷ்வினி - சிக்கி ஜோடி ஜப்பானைச் சேர்ந்த மிசாகி மட்சுடோமோ - அகாயா டகாஹாஷி ஜோடியை எதிர்கொண்டது.இதில் இந்திய ஜோடி 13-21, 14-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய ஜோடி ஜப்பான் ஜோடிக்கு எதிராக தொடர்ச்சியாக 8-வது முறை தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து