முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூர் : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் போட்டியிடுகிறார்.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் கவுடா, பி.கே. ஹரிபிரசாத் (இருவரும் காங்கிரஸ் கட்சி), பிரபாகர் கோர் (பா.ஜனதா), டி. குபேந்த்ரா ரெட்டி (ஜே.டி.எஸ்.) ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இதனால் நான்கு இடங்களில் ஒன்றை எளிதாக வென்று விடும். இதனால் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி உறுதியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 77 வயதாகும் மல்லிகார்ஜுன் கார்கே 95,452 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வியடைந்தார்.

9 முறை எம்.எல்.ஏ.-வாகவும், இரண்டு முறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்துள்ளார். மாநில அளவிலும் பலமுறை அமைச்சராக இருந்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து