சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      தமிழகம்
EPS OPS 2020 11 08

Source: provided

சென்னை : சென்னை புறநகர் மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை புறநகர் மாவட்டத்தின், மாவட்ட, பகுதி, ஒன்றியம், கண்டோன்மெண்ட் ஆகியவற்றின் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

சென்னை புறநகர் மாவட்ட அவைத் தலைவராக எம். காமராஜ், மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன், மாவட்ட இணை செயலாளராக ஜே.எல். லட்சுமி, மாவட்ட துணை செயலாளர்களாக ஒய்.மாலதி, அம்மன் பி. வைரமுத்து, மாவட்ட பொருளாளராக ஏ.முஸ்தபா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக ஆலந்தூர் கே. புருஷோத்தமன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக ஆர். கபாலிஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளராக டி.கண்ணபிரான், மகளிர் அணி மாவட்ட செயலாளராக எஸ். செல்வராணி, மாணவர் அணி மாவட்ட செயலாளராக ஏ.என்.இ. பழனி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளராக இ. தனபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக எஸ். வாஞ்சிநாதன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளராக ஏ. அப்துல்லா, விவசாய பிரிவு மாவட்ட செயலாளராக இ. சீனிவாசன், மீனவர் பிரிவு மாவட்ட செயலாளராக பி.எஸ். ராஜன், மருத்துவ அணி மாவட்ட செயலாளராக எச். ஜானகிராமன், இலக்கிய அணி மாவட்ட செயலாளராக தஞ்சை ராஜசேகர், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளராக ஜி.எம். அசோக்குமார், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக டாக்டர் ஆர். ராஜேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளராக எஸ்.எம். தனசேகர், கலை பிரிவு மாவட்ட செயலாளராக எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பகுதி நிர்வாகிகள்

சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளராக லியோ என். சுந்தரம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளராக டி.சி. கருணா, சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி செயலாளராக ஜி.எம்.ஜானகிராமன், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி செயலாளராக ஏ.ஏழுமலை, ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளராக வி.என்.பி.வெங்கட்ராமன், ஆலந்தூர் மேற்கு பகுதி செயலாளராக எஸ்.ராஜசேகர்,

ஒன்றிய நிர்வாகிகள்

பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக பெரும்பாக்கம் இ.ராஜசேகர், குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக கே.பி. ஏசுபாதம், பரங்கிமலை – பல்லாவரம் கண்டோன்மெண்ட் செயலாளராக எம்.எஸ்.டி.தேன்ராஜா, பரங்கிமலை – பல்லாவரம் கண்டோன்மெண்ட் 1 வது வார்டு செயலாளராக கே. திலக்கதீஸ்வரன், 2வது வார்டு செயலாளராக எஸ்.ஜோசப், 3–வது வார்டு செயலாளராக ஆர்.சேகர், 4வது வார்டு செயலாளராக ஏ.முருகன், 5வது வார்டு செயலாளராக ஓ. ஆனந்தகுமார், 6வது வார்டு செயலாளராக பி. நவரத்தன், 7வது வார்டு செயலாளராக ஏ.ஆர். மீரான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு  முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து