முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து : மும்பை அணி அபார வெற்றி

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கோவா : 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே தாக்குதல் பாணியில் இறங்கிய மும்பை அணி 20-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஹூகோ அட்னன் போமோஸ் பின்கள வீரர்கள் மற்றும் கோல் கீப்பரை ஏமாற்றி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் ஆடம் லி பான்ட்ரே அருமையாக கோல் வளையத்துக்குள் திணித்தார். 

48-வது நிமிடத்தில் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி ஆடம் லி பான்ட்ரே மீண்டும் கோல் அடித்தார். தொடர்ந்து 58-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் மும்பை அணி வீரர் ஹூகோ அட்னன் போமோஸ் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் ஹெர்னன் டேனியல் கோலாக மாற்றினார்.

முடிவில் மும்பை அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து